தேடுதல்

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய ஆயர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய ஆயர்கள் 

இந்திய மறைமாவட்டங்களுக்குப் புதிய ஆயர்கள் நியமனம்

பேரருள்திரு ஆல்பர்ட் அலெக்சாண்டர் அனஸ்தாஸ் அவர்கள், கோட்டாறு மறைமாவட்டத்தில் உள்ள மணவிளை எனும் ஊரில் 1966ஆம் ஆண்டு டிசம்பர் 16 அன்று பிறந்தவர். இறையியல் மற்றும் தத்துவஇயலை திருச்சி புனித பவுல் கல்லூரி, மற்றும் கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரியில் பயின்றவர்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

இந்தியாவின் கும்பகோணம், குழித்துறை, ஜபல்பூர், விஜயபுரம், கர்வார், மீரட், ஆகிய 6  மறைமாவட்டங்களுக்குப் புதிய ஆயர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சனவரி 13 சனிக்கிழமை வெளியிடப்பட்ட தகவல்களின்படி கும்பகோணம் மறைமாவட்ட ஆயராக அருள்பணி ஜீவானந்தம் அமலநாதன், குளித்துறை மறைமாவட்ட ஆயராக பேரருள்திரு ஆல்பர்ட் அலெக்சாண்டர் அனஸ்தாஸ், ஜபல்பூர் மறைமாவட்ட ஆயராக பேரருள்திரு வளன் அரசு, விஜயபுரம் மறைமாவட்ட துணைஆயராக பேரருள்திரு ஜஸ்டின் அலெக்சாண்டர் மடத்திபரம்பில், மீரட் மறைமாவட்ட ஆயராக பேரருள்திரு பாஸ்கர் ஜேசுராஜ், கர்வார் மறைமாவட்ட ஆயராக பேரருள்திரு Duming Dias  ஆகியோர் திருத்தந்தையால் புதிய ஆயர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் அருள்பணி ஜீவானந்தம்

கும்பகோணம் மறைமாவட்ட ஆயராக அருள்பணி ஜீவானந்தம் அமலநாதன் அவர்கள் திருத்தந்தையால் ஆயராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தின் மிக்கேல்பட்டியில் 1963ஆம் ஆண்டு ஏப்ரல் 2 அன்று பிறந்த புதிய ஆயராக நியமிக்கப்பட்டுள்ள ஜீவானந்தம் அமலநாதன் அவர்கள், மேய்ப்புப்பணி இறையியலில் முனைவர் பட்டத்தை உரோம் இலாத்தரன் பல்கலைக்கழகத்தில் பெற்றவர்.

பேரருள்திரு அமிர்தசாமி அவர்கள் தனது இளம் குருமட வாழ்வை கும்பகோணத்திலும் இறையியல் மற்றும் மெய்யியலை பூந்தமல்லி திரு இருதய குருகுலத்திலும் மே 6, 1990 ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.  பாத்திமாபுரம் கபிஸ்தலம் ஆகிய பங்குகளில் பங்குத்தந்தையாக பணியாற்றி விட்டு பூந்தமல்லி திரு இருதய குருமடத்தில்  பேராசிரியராக (1998 - 2002 |பணியாற்றிய நிலையில் உரோமையில் உயர் கல்வியையும் (2003-2008)  பூந்தமல்லி திரு இருதய குரு மடத்தில் 2008 முதல் 2014 வரை பேராசிரியராகவும் பணியாற்றினார். 2015- 2016 ஆண்டுகளில் பூண்டி மாதா பங்குத்தந்தையாகவும், 2016 ஆம் ஆண்டு முதல் இன்று வரை கும்பகோணம் மறைமாவட்ட முதன்மை குருவாக பணியாற்றி வருகின்றார். 

குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஆல்பர்ட் அலெக்சாண்டர் அனஸ்தாஸ்      

குளித்துறை மறைமாவட்ட ஆயராக நியமிக்கப்பட்டுள்ள பேரருள்திரு ஆல்பர்ட் அலெக்சாண்டர் அனஸ்தாஸ் அவர்கள், கோட்டாறு மறைமாவட்டத்தில் உள்ள மணவிளை எனும் ஊரில் 1966ஆம் ஆண்டு டிசம்பர் 16 அன்று பிறந்தவர். இறையியல் மற்றும் தத்துவஇயலை திருச்சி புனித பவுல் கல்லூரி, மற்றும் கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரியில் பயின்றவர்.

ஜபல்பூர் மறைமாவட்ட ஆயர் வளன் அரசு

தென்இந்தியாவின் ஜபல்பூர் மறைமாவட்ட ஆயராக பணியாற்றி வந்த ஆயர் ஜெரால்டு அல்மேதா அவர்களின் பதவி விலகலை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை அவர்கள், தூய அலாய்சியஸ் கல்லூரியின் தலைவராகப் பணியாற்றி வந்த கோட்டாறு மறைமாவட்டத்தைச் சார்ந்த பேரருள்திரு வளன் அரசு அவர்களை அம்மறைமாவட்டத்திற்குப் புதிய ஆயராக நியமித்துள்ளார்.

புதிய ஆயராக நியமிக்கப்பட்டுள்ள பேரருள்திரு வளன் அரசு அவர்கள்,  1967 ஆம் ஆண்டு ஜூன் 13 அன்று கோட்டார் மறைமாவட்டத்தில் உள்ள ஏனாயத்தில் பிறந்தவர். தத்துவஇயல், இறையியல், வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம், பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டமும்  முனைவர் பட்டமும் பெற்றவர்.

விஜயபுரம் மறைமாவட்ட துணைஆயர் ஜஸ்டின் அலெக்சாண்டர் மடத்திபரம்பில்

விஜயபுரம் மறைமாவட்ட துணைஆயராக நியமிக்கப்பட்டுள்ள பேரருள்திரு ஜஸ்டின் அலெக்சாண்டர் மடத்திபரம்பில் அவர்கள், விஜயபுரம் மறைமாவட்டத்தில் உள்ள பாம்பனார் எனும் ஊரில் பிறந்தவர்.   

மீரட் மறைமாவட்டத்திற்கு தஞ்சாவூர் மறைமாவட்டத்தைச் சார்ந்த பேரருள்திரு பாஸ்கர் ஜேசுராஜ் அவர்களையும் கர்வார் மறைமாவட்டத்திற்கு பேரருள்திரு Duming Dias அவர்களையும், புதிய ஆயராக  நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மைசூர் மறைமாவட்ட ஆயராகப் பணியாற்றி வந்த ஆயர் கன்னிகாதாஸ் அந்தோணி வில்லியம் அவர்களின் பதவி விலகலை ஏற்றுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 January 2024, 13:05