தேடுதல்

திருத்தந்தையுடன் சீரோ மலங்காரா ஆயர் மாமன்றம் திருத்தந்தையுடன் சீரோ மலங்காரா ஆயர் மாமன்றம்  (ANSA)

காட்கியின் புனித எப்ரேம் மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர்

காட்கியின் புனித எப்ரேம் மறைமாவட்ட புதிய ஆயர் அருள்பணி மத்தாய் கடவில் அவர்களின் நியமனத்திற்கு தன் ஒப்புதலை வழங்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இந்தியாவின் சீரோ மலங்காரா ஆயர் மாமன்றத்தால் பூனாவின் காட்கி புனித எப்ரேம் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அருள்பணி மத்தாய் கடவில் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு தன் ஒப்புதலை வழங்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

1963 ஆம் ஆண்டு டிசம்பரில் கேரளாவின் கண்ணத்துநாடு என்னுமிடத்தில் பிறந்து, 1989ல்  அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்ட மத்தாய் கடவில், பங்குதளத்தில் பணியாற்றியதுடன் இளையோருக்கான மேய்ப்புப்பணியில் மிகுந்த ஆர்வம் கொண்டு செயல்பட்டுள்ளார்.

பெல்ஜியம் லுவெய்ன் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், திருவனந்தபுரம் மலங்கரா உயர் குருமடத்தில் பேராசிரியாக பணியாற்றியதுடன், 2021ஆம் ஆண்டு இவர் சார்ந்திருக்கும் Imitation of Christ என்ற துறவு சபையின் உயர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தற்போது சீரோ மலங்காரா ஆயர் மாமன்றத்தால் பூனாவின் காட்கி புனித எப்ரேம் மறைமாவட்ட ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அருள்பணி மத்தாய் கடவில் அவர்களின் நியமனத்திற்கு தன் ஒப்புதலை வழங்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 December 2023, 14:06