தேடுதல்

ஏழைகளுக்காக ஏழைகளோடு என்ற இசைக் கச்சேரியை ஏற்பாடுச் செய்துள்ளவர்களைச் சந்தித்த திருத்தந்தை ஏழைகளுக்காக ஏழைகளோடு என்ற இசைக் கச்சேரியை ஏற்பாடுச் செய்துள்ளவர்களைச் சந்தித்த திருத்தந்தை   (VATICAN MEDIA Divisione Foto)

ஏழைகளுக்காக ஏழைகளோடு என்ற வத்திக்கானின் இசைக் கச்சேரி

ஏழைகளுக்காக இசைக் கச்சேரி என்பதிலிருந்து ஒருபடி மேலேச் சென்று, ஏழைகளுக்காக ஏழைகளோடு என்பதாக மாறியுள்ளது குறித்து திருத்தந்தை மகிழ்ச்சி

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

டிசம்பர் 15, வெள்ளிக்கிழமையன்று மாலை, ஏழைகளுக்காக ஏழைகளோடு என்ற தலைப்பில் வத்திக்கானின் புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கில் இசைக் கச்சேரி ஒன்றை ஏற்பாடுச் செய்துள்ளவர்களைச் சந்தித்து தன் பாராட்டுக்களையும் நன்றியையும் வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வெள்ளிக்கிழமை காலையில் இவர்களை வத்திக்கானில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை, பலரின் உதவியுடன் இடம்பெறும் இந்த ஏழை மக்களுக்கான இசைக் கச்சேரி, மக்கள் ஒருவரையொருவர் சந்திப்பதற்கும், பகிர்வதற்கும் உதவுவதோடு ஏழைகளுக்கு உணவு மற்றும் கம்பளி போர்வையை வழங்குவதையும் உள்ளடக்கியுள்ளது, ஓர் உடன்பிறந்த உணர்வின் எடுத்துக்காட்டாக உள்ளது என பாராட்டினார்.

இந்த இசைக் கச்சேரியின் நோக்கமும் அதன் செயல்பாடுகளும் கிறிஸ்துமஸ் வழங்கும் செய்தியோடு இணைந்துச் செல்கின்றன எனக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த செயல்பாடுகள் அனைத்தும் ஏழைகளுக்காக என்பதிலிருந்து ஒருபடி மேலேச் சென்று, ஏழைகளுக்காக ஏழைகளோடு என்பதாக மாறியுள்ளது குறித்து தன் மகிழ்ச்சியை வெளியிட்டார்.

இறைமகன் நம்மோடு குடியிருக்க நமக்காக மனுவுருவெடுத்து வந்ததுபோல், நாமும் நம் அயலாருக்காக நம்மிடம் உள்ளதைப் பகிர்ந்து அவர்களுக்காக அவர்களோடு இணைந்திருக்கும்போது அது நட்புறவாக மாறுகிறது, அதாவது, அவர்களுக்காக, அவர்களோடு என்பதாக மாறுகிறது என எடுத்துரைத்தார் திருத்தந்தை.  

கிறிஸ்து பிறப்பு விழா தயாரிப்புக் காலங்களில் இசை மட்டும் போதாது, மின்விளக்குகளும் அலங்காரங்களும் மட்டும் போதாது, மாறாக,     இறைவேண்டல் மிக முக்கியமானது என மேலும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 December 2023, 14:54