தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (ANSA)

புனிதமென்பது இயேசுவை ஒத்திருப்பது

இயேசு நேசித்ததைப் போல நாமும் அன்பு செலுத்த முயற்சிக்கும் போது மட்டுமே தூயவர்களாக நாம் இறைஇயேசுவை ஒத்திருப்போம்

திமினா செலின் இராஜேந்திரன் – வத்திக்கான்

நவம்பர் மாதம்  10ஆம் தேதி, வெள்ளிக்கிழமையன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் புனித வாழ்விற்கு அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

புனிதமாக நாம் வாழ இயேசுவை ஒத்திருப்பது இன்றியமையாதது என்றும், இறை இயேசுவின் உணர்வுகளுடன் நம் இதயங்களை துடிக்க அனுமதிப்பது அது என்றும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இயேசு நேசித்ததைப் போல நாம் அன்பு செலுத்த முயற்சிக்கும் போது மட்டுமே, கடவுளைக் காணும்படி செய்து, தூய வாழ்விற்கான நமது அழைப்பை நிறைவேற்றுவோம் என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஓருவர் ஓருவருக்கான அன்பில் நிலைத்து, இறைப்பிரசன்னத்தை நிலைநாட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தி பெரும் தூண்டுதலாகவுள்ளது.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 November 2023, 14:49