தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  (ANSA)

கடவுள் சாவை ஒழித்துவிடுவார், கண்ணீரைத் துடைத்துவிடுவார்

கண்ணீர் என்றென்றும் நிலைத்திருக்கும் ஒன்றல்ல, கடவுளோடு அது ஒரு முடிவுக்கு வரும். நம் கண்களிலிருந்து கண்ணீரை அகற்ற, அதை கடவுள் தனக்கென எடுத்துக்கொண்டார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இறைவனில் துயிலுறுவோருக்காக சிறப்பான விதத்தில் செபிக்க அழைப்புவிடுக்கும் இந்த நவம்பர் மாதத்தில்,   இறைவன் சாவை ஒழித்துவிடுவார்; எல்லா முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்து விடுவார் (எசா 25:8), என்ற எசாயா நூல் வார்த்தைகளுடன் டுவிட்டர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் மாதம் 3ஆம் தேதி, வெள்ளிக்கிழமையன்று டுவிட்டர் செய்தி ஒன்றை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கண்ணீர் என்றென்றும் நிலைத்திருக்கும் ஒன்றல்ல, கடவுளோடு அது ஒரு முடிவுக்கு வரும், புனித விவிலியம் முன்னுரைப்பதுபோல், கடவுள் சாவை ஒழித்துவிடுவார் மற்றும் நம் முகங்களிலிருந்து கண்ணீரைத் துடைத்துவிடுவார், என எசாயா நூல் வார்த்தைகளை மேற்கோள் காட்டிதுடன்,  நம் கண்களிலிருந்து கண்ணீரை அகற்ற, அவற்றை கடவுள் தனக்கென எடுத்துக்கொண்டார் என மேலும் கூறியுள்ளார்.

உயிரிழந்துள்ள உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களின் மரணம் குறித்து அதிக துயருறும் விசுவாசிகளுக்கு ஆறுதல் வழங்குவதாக இந்த டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 November 2023, 14:50