தேடுதல்

மாற்றுத்திறனாளிகளுடன் அன்னை திரேசா (29.08.2018) மாற்றுத்திறனாளிகளுடன் அன்னை திரேசா (29.08.2018)  

சமூகத்தின் அக்கறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மைய இடம்

அனைத்து நிறுவனங்களும் மாற்றுத்திறனானிகளின் உயிர்துடிப்புடைய பங்கேற்பை ஊக்குவிக்கும்வண்ணம் அவர்களை உள்ளுக்குள் கொணரும் திட்டங்களை வகுத்துச் செயல்படவேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

சமூகத்தின் அக்கறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மைய இடம் வழங்கப்பட வேண்டும் என நாம் அனைவரும் ஒன்றிணைந்து இறைவேண்டல் செய்வோம் என தன் செவ்வாய்க்கிழமை டுவிட்டர் செய்தியில் அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மாற்றுத்திறனாளிகள் குறித்த தன் அக்கறையை வெளிப்படுத்தும் டிசம்பர் மாதத்திற்கான செபக்கருத்தையொட்டி இந்த டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ள திருத்தந்தை, அவர்கள் மீதான அக்கறை சமூகத்தின் மையமாக இருக்க வேண்டும் என செபிப்போம் என்ற விண்ணப்பத்தை விடுத்துள்ளதுடன், அனைத்து நிறுவனங்களும் மாற்றுத்திறனானிகளின் உயிர்துடிப்புடைய பங்கேற்பை ஊக்குவிக்கும்வண்ணம் அவர்களை உள்ளுக்குள் கொணரும் திட்டங்களை வகுத்துச் செயல்படவேண்டும் என கேட்டுள்ளார்.

நவம்பர் 28ஆம் தேதி வெளியிட்ட இந்த டுவிட்டர் செய்தியுடன் ஆங்கிலத்தில் மட்டும் இதுவரை 5162 குறுஞ்செய்திகள் திருத்தந்தையின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 1 கோடியே 86 இலட்சம் பேர் இந்த டுவிட்டர் செய்திகளைப் பார்வையிட்டுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 November 2023, 15:38