தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

திருத்தந்தைக்கு நுரையீரல் தொற்று இல்லை!

பொதுவாக காய்ச்சல் என்று அழைக்கப்படும் இன்ஃப்ளூயன்ஸா (Influenza) என்பது, உலக சுகாதார அமைப்பின் (WHO) படி, கடுமையான காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடல் வலிகள் மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகளுடன் சேர்ந்துள்ளது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நல்ல முன்னேற்றமான நிலையில் இருக்கிறார் என்றும், அவருக்கு காய்ச்சல் இல்லை, அவரது சுவாச நிலை தெளிவாக மேம்பட்டு வருகிறது என்றும் கூறியுள்ளார் திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் இயக்குநர் மத்தேயோ புரூனி.

நவம்பர் 27, திங்கள்கிழமை காலை திருத்தந்தையின் உடல்நலம் குறித்த அண்மைய புதிய அறிக்கை குறித்து தெரிவித்தபோது இவ்வாறு உரைத்தார் புரூனி.

நவம்பர் 25, இச்சனியன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மருத்துவப் பரிசோதனைக்காக உரோமையுள்ள ஜெமெல்லி மருத்துவமனைக்குச் சென்ற வேளை, அவருக்கு லேசான காய்ச்சல் உள்ளது என்றும், ஆனால் நுரையீரல் தொற்று பிரச்னை எதுவும் இல்லை என்றும் CT ஸ்கேன் அறிக்கை தெரிவிப்பதாகவும் உரைத்துள்ளார் புரூனி.

மருத்துவ அறிக்கைகள் நுரையீரல் சிக்கல்களின் ஆபத்திற்கு எதிர்மறையான முடிவுகளை அளித்தன என்றும், பின்னர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனிக்கிழமை அன்றே, வத்திகானிலுள்ள தனது இல்லமான சாந்தா மரியாவுக்குத் திரும்பினார் என்றும் திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் அறிக்கை மேலும் தெரிவிக்கின்றது.

திருத்தந்தை குணமடைவதற்கு வசதியாக, அடுத்த சில நாட்களுக்கு திட்டமிடப்பட்டிருந்த சில முக்கியமான நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார் புரூனி

பொதுவாக, காய்ச்சல் என்று அழைக்கப்படும் இன்ஃப்ளூயன்ஸா (Influenza) என்பது, உலக நலவாழ்வு அமைப்பின் (WHO) படி, கடுமையான காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடல் வலிகள் மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகளுடன் சேர்ந்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 November 2023, 14:56