தேடுதல்

2022 கிறிஸ்து பிறப்புப் பெருவிழா கொண்டாட்டத்தின்போது 2022 கிறிஸ்து பிறப்புப் பெருவிழா கொண்டாட்டத்தின்போது  (VATICAN MEDIA Divisione Foto)

டிசம்பர்-ஜனவரியில் திருத்தந்தையின் திருவழிபாட்டுக் கொண்டாட்டங்கள

ஜனவரி முதல் தேதி திருஅவையில் அன்னை மரியா இறைவனின் தாய் என்னும் விழாவும், 57வது உலக அமைதி தினமும் சிறப்பிக்கப்படவுள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பொதுமக்களுடன் கலந்துகொள்ள உள்ள திருவழிபாட்டுக் கொண்டாட்டங்கள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது திருவழிபாடுகளுக்கான திருப்பீட அலுவலகம்.

கிறிஸ்து பிறப்பு விழாவையொட்டிய இரவு திருப்பலி டிசம்பர் 24ஆம் தேதி மாலை 7.30 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் இடம்பெறும் எனவும், அடுத்த நாள் டிசம்பர் 25ஆம் தேதி, நண்பகல் 12 மணிக்கு தூய பேதுரு பெருங்கோவில் மேல் மாடத்தில் இருந்து ஊருக்கும் உலகுக்குமான Urbi et Orbi செய்தியையும் ஆசீரையும் வழங்குவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 31ஆம் தேதி மாலை 5 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு கோவிலில் Te Deum என்ற நன்றி வழிபாடு திருத்தந்தையின் தலைமையில் இடம்பெற உள்ளது.

ஜனவரி முதல் தேதி திருஅவையில் அன்னை மரியா இறைவனின் தாய் என்னும் விழா சிறப்பிக்கப்படுவதையொட்டி, காலை 10 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் திருப்பலி நிறைவேற்றி 57வது உலக அமைதி தினத்தையும் சிறப்பிக்கவுள்ளார் திருத்தந்தை.  

ஜனவரி 6ஆம் தேதி காலை 10 மணிக்கு திருத்தந்தையின் தலைமையில் வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் திருக்காட்சி திருவிழா திருப்பலி இடம்பெறும்.

 மேலும், ஜனவரி 7ஆம் தேதி, இயேசுவின் திருமுழுக்குத் திருவிழாவன்று, காலை 9.30 மணிக்கு வத்திக்கானின் சிஸ்டைன் சிற்றாலயத்தில் சில குழந்தைகளுக்கு திருமுழுக்கு வழங்கி திருப்பலி நிறைவேற்றுவார் திருத்தந்தை பிரான்சிஸ்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 November 2023, 15:30