தேடுதல்

இயற்கையின் எழில் இயற்கையின் எழில் 

சமூக ஒற்றுமை, சகோதரத்துவம், நல்லிணக்கம் கொண்டு வாழ

படைப்பைப் பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை . - திருத்தந்தை பிரான்சிஸ்

மெரினா ராஜ் – வத்திக்கான்

கத்தோலிக்கர்கள் சமூகத் துறையில் தெளிவு மற்றும் உறுதியுடன் ஒன்றிணைய வேண்டும் என்றும், பன்னாட்டு நிலைத்த தன்மையின் கவலைக்குரிய சூழல் அச்சத்தை ஏற்படுத்துவதால் சமூக ஒற்றுமை, சகோதரத்துவம், நல்லிணக்கம் மற்றும் அர்ப்பண உணர்வுடன் மக்கள் அனைவரும் வாழ வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 20 திங்கள் கிழமை முதல், 26 ஞாயிற்றுக்கிழமை வரை பிரான்ஸ் நாட்டின் லிபோன் நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரான்ஸ் சமூக வாரக் கூட்டத்திற்கு, அனுப்பப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செய்தியானது திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்கள் கையொப்பமிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.

சமூக மற்றும் சுற்றுச்சூழல் நெருக்கடிகளை ஒரே நேரத்தில் தீர்க்க முயற்சித்து வரும்  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஒருங்கிணைந்த சூழலியலின் பொருத்தத்தை புரிந்துகொள்ளவேண்டும் என்றும், படைப்பைப் பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை என்று வலியுறுத்தும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வரிகளை மேற்கொள் காட்டியுள்ளார் கர்தினால் பரோலின்.

நம்மை வரவேற்கும் உலகம் சிதைந்து, இறுதி நாளை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் நமது எதிர்வினைகள் மாற்றுச் செயல்பாடுகள் போதுமானதாக இல்லை என்று திருத்தந்தை வலியுறுத்துவது போல, படைப்பின் பாதுகாப்பிற்கான தனிப்பட்ட அர்ப்பணிப்பு கிறிஸ்தவ வாழ்க்கையின் இன்றியமையாததாக இருந்தாலும், அது படைப்பாளரான கடவுள் மீதுள்ள நம்பிக்கைக்கு சாட்சியமளிக்கும் மற்றும் சுற்றுச்சூழலை மதிக்கும் கலாச்சாரத்தை உருவாக்குவதற்கு பங்களிக்கிறது என்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார் கர்தினால் பரோலின்.

பன்னாட்டு சமூகத்தின் பலவீனங்கள், சிக்கலான சூழ்நிலைகளில் ஒருங்கிணைப்பு இல்லாமை, அடிப்படை மனித உரிமைகள் தொடர்பாக விழிப்புணர்வின்மை போன்றவற்றை ஈடுசெய்ய பல சமூகக் குழுக்களும் அமைப்புகளும் உதவுகின்றன என்பதை திருத்தந்தை வரவேற்பதாகக் குறிப்பிட்டுள்ளார் கர்தினால் பியத்ரோ பரோலின்.

துபாயில் நவம்பர் 30 முதல் டிசம்பர் 12 ஆம்  நாள் வரை இடம்பெற உள்ள Cop28 என்ற கருத்தரங்கில் பங்கேற்பதற்காக மேற்கொள்ள இருக்கும் திருத்தந்தையின் பயணமானது அனைத்து கத்தோலிக்கர்களையும், சமூகத் துறையில்,தொலைநோக்கு மற்றும் உறுதியுடன் அணிதிரட்ட ஊக்குவிக்கும் அவரது அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாக அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ்தவ நம்பிக்கையானது, இறைவனின் சீடர்களை மனிதகுலம், அனைத்து உயிரினங்கள் மற்றும் பொதுவான இல்லாமகிய இப்பூமியுடன் மிகவும் ஆழமாக பிணைக்கின்றது என்றும், "நற்செய்தியின் புதுமை, ஒரு தீவிரமான புதுமை அது கடந்து செல்லும் புதுமை அல்ல என்ற திருத்தந்தையின் வார்த்தைகளையும் நினைவுகூர்ந்துள்ளார் கர்தினால் பரோலின்.

சமகால யதார்த்தங்கள் பற்றிய பிரான்ஸ் சமூக வாரக்கூட்டத்தாரின் கண்ணோட்டம், திறன்கள் ஆகிய அனைத்தும் பலதரப்பட்ட முன்னோக்குகளின் ஒருங்கிணைப்பால் செழுமைப்படுத்தப்பட்டு, பிரான்ஸ் தலத்திருஅவையை அதன் பணியில் ஆதரிக்கட்டும் என்றும், கடவுளாகிய இயேசுவின் புதுமை மட்டுமே தீவிரமானது, ஏழைகள் மத்தியில் ஒளிவீசுகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார் கர்தினால் பரோலின்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 November 2023, 14:29