தேடுதல்

பிரான்சின் Nantes மறைமாவட்டக் குழுவினருடன் திருத்தந்தை பிரான்சின் Nantes மறைமாவட்டக் குழுவினருடன் திருத்தந்தை  

குழந்தைகளின் உரிமைகளைச் சீர்குலைக்க வேண்டாம்!

பாலியல் முறைகேட்டின் மௌனத்தை உடைக்க ஒவ்வொருவரும் அவரவர் பங்களிப்பைச் செய்ய முடியும்; இதை நாம் ஒன்றாக மட்டுமே செய்ய முடியும் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

வன்முறை மற்றும் முறைகேடுகள் வழியாகக் குழந்தைகளின் உரிமைகளை சீர்குலைப்பது என்பது, கடவுள் கொடுத்த மனிதகுலத்திற்கு செய்யும் துரோகம்" என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 28, இச்செவ்வாயன்று, பிற்பகல் தனது இல்லமான சாந்தா மார்த்தாவில், திருஅவை உறுப்பினர்களால் பாலியல் முறைகேட்டிற்கு உள்ளாக்கப்பட்ட பிரான்சின் Nantes மறைமாவட்டத்திலிருந்து வந்த பிரதிநிதிகள் குழுவொன்றை திருஅவை அதிகாரிகளுடன் சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்தார் திருத்தந்தை.

குழந்தைகளாக, அவர்களின் குடும்பங்களுடன் இணைந்து, உண்மையான மற்றும் நல்லதைத் தேடும் இடத்தில் மிகப்பெரிய தீமையை அனுபவித்ததை நினைவுகூர்ந்த திருத்தந்தை, உங்கள் வார்த்தைகளைக் கேட்டு உங்கள் சாட்சியங்களை சேகரிக்கும்படி ஆணையத்திடம் கேட்டுக்கொள்கிறேன் என்றும், இவைகள், நமது திருஅவை மற்றும் சமூகங்களில் இருந்து பாலியல் முறைகேடுகளை ஒழிப்பதற்கான நமது பொதுவான உறுதிப்பாட்டை வலுப்படுத்தி ஊக்குவிக்கும் என்றும் எடுத்துரைத்தார்.

அருள்பணியாளர்கள் மற்றும் துறவியர் உருவாக்கப் பயிற்சி மற்றும் தொழில்முறை தரங்களைப் பாதுகாத்தல் மற்றும் பள்ளிகளில் பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதில் திருஅவையின் உறுதிப்பாடுகள் புதுப்பிக்கப்படும் என்றும் வாக்களித்தார் திருத்தந்தை.

மேலும் பாலியல் முறைகேட்டில் இருந்து தப்பிய அவர்களின் துணிச்சல் மற்றும் வலிமைக்காக அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறிய திருத்தந்தை, அவர்களின் குரல்கள் கேட்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 November 2023, 13:53