தேடுதல்

முன் தயாரிப்பு செபவழிபாட்டில் திருத்தந்தை முன் தயாரிப்பு செபவழிபாட்டில் திருத்தந்தை   (ANSA)

ஒருங்கிணைந்த பயணத்தின் அடிப்படை உண்மையின் கருப்பொருள்

திருத்தந்தை : செவிமடுத்தல், புரிந்துகொள்ளல், இறைவிருப்பதை நடைமுறைக்குக் கொணரல் என்பவைகளை நாம் மறந்துவிடக்கூடாது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

உரோம் நகர் புனித பேதுரு பெருங்கோவில் வளாக திருப்பலியுடன், செப்டம்பர் 4ஆம் தேதி புதன்கிழமையன்று துவக்கப்பட உள்ள ஆயர் மாமன்றக் கூட்டம் குறித்து செப்டம்பர் 3ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று டுவிட்டர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செவிமடுத்தல், புரிந்துகொள்ளல், இறைவிருப்பதை நடைமுறைக்குக் கொணரல் என்பவைகளை நாம் மறந்துவிடக்கூடாது என்பதே, ஒருங்கிணைந்த பயணத்தின் அடிப்படை உண்மையில் காணப்படும் கருப்பொருள், என திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி உரைக்கிறது.

‘ஒருங்கிணைந்து நடைபோடும் திருஅவைக்கு ஒன்றிப்பு, பங்கேற்பு மற்றும் மறைப்பணி’ என்ற கருப்பொருளுடன் வத்திக்கானில் அக்டோபர் 4ஆம் தேதி புனித பிரான்சிஸ் அசிசியின் திருவிழாவோடு துவங்கும் உலக ஆயர் மாமன்றம் இம்மாதம் 29ஆம் தேதி வரை இடம்பெறுகிறது.

இதில் ஏறக்குறைய 364 பேர் பங்கேற்கின்றனர். ஒருங்கிணைந்து நடத்தலை மையமாகக் கொண்டு இடம்பெறும் இந்த உலக ஆயர் மாமன்றத்தின் இரண்டாம் தொடர், அதாவது, நிறைவுப் பகுதி 2024ஆம் ஆண்டு அக்டோபரில் இடம்பெற உள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 October 2023, 13:53