தேடுதல்

பாதிக்கப்பட்ட மொராக்கோ பகுதி பாதிக்கப்பட்ட மொராக்கோ பகுதி  

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருத்தந்தை இரங்கல்

செப்டம்பர் 8 வெள்ளிக்கிழமை ஏற்பட்டநிலநடுக்கத்தால் ஏராளமான உயிர்ச்சேதமும் பொருள்சேதமும் ஏற்பட்டுள்ளன.

மெரினா ராஜ் – வத்திக்கான்

மொராக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இறந்த ஏறக்குறைய இரண்டாயிரம் பேரின் ஆன்மா இறைவனில் நிறையமைதியடையவும், பாதிக்கப்பட்ட, காயமடைந்த மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார்க்காகத் தொடர்ந்து செபிப்பதாகவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 10 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு மூவேளை செபஉரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அதன் முடிவில் மொராக்கோவில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட  நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக செபிக்க அழைப்புவிடுத்தார்.

செப்டம்பர் 8 வெள்ளிக்கிழமை ஏற்பட்ட 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால்  ஏராளமான உயிர்ச்சேதமும் பொருள்சேதமும் ஏற்பட்டுள்ள நிலையில், மீட்புப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் அனைவருக்கும் தனது செபத்தினை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

2000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கும் வேளையில் அவர்களில் 1,400 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றும், வட ஆப்ரிக்க நாட்டில் செப்டம்பர் 10 ஞாயிற்றுக்கிழமை காலை, மரகேச் மற்றும் அதைச் சுற்றியுள்ள நகரங்களில் புதிய நிலநடுக்கம் உணரப்பட்டது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 September 2023, 13:46