தேடுதல்

மங்கோலியாவில் திருத்தந்தை மங்கோலியாவில் திருத்தந்தை  (VATICAN MEDIA Divisione Foto)

திருப்பயணத்தின் வழி இறையருளைப் பெற்றுள்ளது மங்கோலியா

மத்திய ஆசியா ஆயர் பேரவைத் தலைவர் : மங்கோலியா நாடு, அமைதியை எவ்வாறு வளர்ப்பது என்பது குறித்து நமக்குக் கற்றுத்தர முடியும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மங்கோலியா நாட்டிற்கான திருப்பயணம், அங்கு சிறிய அளவில் வாழும் கத்தோலிக்கர்களுக்கானது எனினும், அதன் வழியாக அந்த நாடு முழுவதும் இறையருளைப் பெற்றுள்ளது எனக் கூறினார் மத்திய ஆசியாவிற்கான ஆயர் பேரவைத் தலைவர், ஆயர் José Luis Mumbiela Sierra.

மங்கோலிய நாட்டிற்கான திருத்தந்தையின் திருப்பயணத்தின் விளைவுகள் குறித்து வத்திக்கான் செய்திகளுக்கு தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட காசாகிஸ்தானின் Almaty ஆயர் Mumbiela Sierra அவர்கள்,  மங்கோலியாவில் குடிமக்கள் சமூகத்துடனும், மதக்குழுக்களுடனும், கத்தோலிக்கர்களுடனும், கத்தோலிக்கரல்லாதவர்களுடனும் என பல்வேறு சந்திப்புக்களை திருத்தந்தை மேற்கொண்டது ஓர் அடையாளமாக இருந்தது என்றார்.

ஒவ்வொரு சந்திப்பும் வித்தியாசமான நோக்கங்களைக் கொண்டதாக, அவைகளுக்கேயுரிய சிறப்பு அருளைக் கொண்டதாக இருந்ததாக உரைத்த மத்திய கிழக்கு ஆசியாவின் ஆயர் பேரவைத் தலைவர், 2022ஆம் ஆண்டில் காசாகிஸ்தான் நாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்ட திருப்பயணத்தையும் நினைவுகூர்ந்தார்.

மிகச் சிறிய அளவிலேயே கத்தோலிக்கர்களைக் கொண்டுள்ள மங்கோலியா நாட்டின் இளையோர், இவ்வுலகிற்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் ஆற்றல் பெற்றவர்களாக உள்ளார்கள் எனவும் கூறிய ஆயர், மங்கோலியா நாடு, அமைதியை எவ்வாறு வளர்ப்பது என்பது குறித்து நமக்குக் கற்றுத்தர முடியும் எனவும் எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 September 2023, 14:09