தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (AFP or licensors)

திருத்தூதுப்பயணம் சிறப்பாக நிறைவேற செயல்பட்டவர்களுக்கு நன்றி

பிரான்சின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த மக்கள், குறிப்பாக 2016 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் நாள் நடந்த கொடூரமான தாக்குதலில் இருந்து உயிர் பிழைத்த Nizza பகுதி மக்களையும் அவர்களுக்குத் துணையாக வந்த அப்பகுதி ஆயர் மற்றும் நகர மேயருக்கும் தன் நன்றியினைத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

மர்சேய்ல் விமான நிலையத்தின் தன்னை வரவேற்ற பிரதமர், மர்சேய்ல் நகர மேயர், ஆகியோர் தொடங்கி, மர்சேய்ல் உயர் மறைமாவட்ட பேராயர், பிரான்ஸ் அரசுத்தலைவர், என இத்திருத்தூதுப்பயணம் நல்ல முறையில்  நிறைவேற உழைத்த அனைவருக்கும் தன் நன்றியினைத் தெரிவித்தார். வேறுபாடு, பாகுபாடு என்னும் தொற்று நோய்களுக்கு மத்தியில் கடவுளின் மென்மையின் அடையாளமான அவர்களின் உறுதியான பணியின் ஆற்றலுக்காக நன்றி கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளின் அருகிருப்பையும் இரக்கத்தையும் அச்செயல் வெளிப்படுத்துகின்றது என்றும் குறிப்பிட்டார்.  

பிரான்சின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த மக்கள், குறிப்பாக  2016 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் நாள் நடந்த கொடூரமான தாக்குதலில் இருந்து உயிர் பிழைத்த Nizza பகுதி மக்களையும் அவர்களுக்குத் துணையாக வந்த அப்பகுதி ஆயர் மற்றும் நகர மேயருக்கும் தன் நன்றியினைத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். பிரான்ஸ் மற்றும் உலகின் அனைத்து பகுதிகளிலும் பயங்கரவாத செயல்கள் நிகழ்த்தப்பட்டன என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பயங்கரவாதம் கோழைத்தனமானது என்றும் இத்தகைய போரின் பயங்கரவாதத்தால் அழிக்கப்பட்ட  பகுதிகள் குறிப்பாக துன்புறுத்தப்பட்ட உக்ரேனிய மக்களின் அமைதிக்காக செபிப்பதில் சோர்வடைய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் நோயாளிகள், சிறார், முதியோர், அனைவரையும் நாகரீகத்தின் நினைவு என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிரான்சின் முதல் அருள்பணியாளரான Jacques Loew மர்சேய்ல் துறைமுகத்தில் பணிபுரிந்தார் என்றும், மர்சேய்ல் துறைமுகப்பகுதியில் பணியாற்றும் தொழிலாளர்களுக்காக செபிப்பதாகக் கூறினார், இறுதியாக லா கார்தே அன்னை மரியா மர்சேய்ல் நகரத்தைக் காக்கட்டும் என்றும், உறுதியான நம்பிக்கை ஒவ்வொருவரின் குடும்பங்களில் வளரட்டும் என்றும் கூறி தனது நன்றியினை வாழ்த்துக்களுடன் தெரிவித்தார்.

நன்றிப்பாடல்களுடன் திருப்பலி நிறைவேற கூடியிருந்த அனைவருக்கும் தன் நன்றியினைத் தெரிவித்து அங்கிருந்து புறப்பட்டு மர்சேய்ல் பன்னாட்டு விமான நிலையத்தை வந்தடைந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 September 2023, 10:10