தேடுதல்

நல்லிணக்கத்தை உலகிற்கு அளிக்க உதவும் சமயங்கள்

எங்கெல்லாம் நல்லிணக்கம் இருக்கின்தோ அங்கே நாம் புரிதல், வளமை மற்றும் அழகை காண்கின்றோம்.

ஜான் போஸ்கோ - வத்திக்கான்

பல்சமய மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்பு கூட்டத்தினருக்கு திருத்தந்தை பிரான்சிஸ் ஆற்றிய உரை

அன்பு சகோதர சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் காலை வணக்கம்!

கிறிஸ்துவை விசுவசிப்போருக்குள் ஓர் விசுவசிக்கும் சகோதரனாகவும், சமய தாகத்தை பகிர்ந்து கொள்வோர் மற்றும் மனித குடும்பத்தின் அங்கத்தினர்களில் உங்கள் அனைவருக்கும் சகோதரனாகவும் உங்களோடு உரையாட என்னை அனுமதிக்க வேண்டுகிறேன். பயணி ஒருவர் தொலைவில் இருந்தே மங்கோலியாவை உற்று நோக்கினார். அவர் வானத்தையும் பூமியையும் மட்டுமே கண்டார் எனும் ரூபாரூக்கின் வில்லியம் கூற்றிற்கேற்ப இங்கே உண்மையாகவே வானம் தெளிவாக நீல நிறத்தில் பரந்த நிலங்களை சூழ்ந்து அரவணைக்கின்றது. இது மனித வாழ்வின் இரண்டு அத்தியாவசிய அம்சங்களை நினைவுபடுத்துகின்றது. ஒன்று மற்றவர்களுடைய உறவுகளால் ஆன பூமிக்குரியது. மற்றொன்று விண்ணுக்குரியது. பயணிகள் மற்றும் வழிப்போக்கர்களாகிய நாம், பூமியில் நமது பயணத்தில் எந்த பாதையை பின்பற்ற வேண்டும் என உய்த்துணர, நமது பார்வையை மேல் நோக்கி வைக்க வேண்டும் என்பதனை மங்கோலியா நம் அனைவருக்கும் நினைவுபடுத்துகின்றது. 

நான் இந்த குறிப்பிடத்தக்க சந்திப்பின் தருணத்தில் உங்களோடு இருப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். உங்கள் ஒவ்வொருவருடைய வருகை மற்றும் உரைகளுக்காகவும் எனது இதயப்பூர்வமான நன்றியை செலுத்துகின்றேன். உங்கள் உரைகள் நமது பொதுவான சிந்தனையை வளப்படுத்தின. நாம் அனைவரும் ஓர் இடத்தில் சந்திக்கின்றோம் ஒன்றிணைகின்றோம் என்பதே இவ்வுலகிற்கு நாம் அனுப்பும் செய்தியாகும். தங்களின் தனித்துவம் மற்றும் பன்முகத்தன்மையால் ஒட்டுமொத்த சமூகத்தின் நன்மைக்காக ஈர்க்கக்கூடிய ஆற்றலை சமய பாரம்பரியங்கள் கொண்டிருக்கின்றன. நாடுகளின் தலைவர்கள், மற்றவர்களுடன் சந்திப்பு மற்றும் உரையாடலின் பாதையைத் தேர்ந்துகொள்வது மக்களை துன்புறுத்துகின்ற தொடர் மோதல்களை நிறுத்துவதற்கு தீர்க்கமான பங்களிப்பாக அமையும்.

அன்பான மங்கோலிய மக்கள், நாம் அனைவரும் நமது பரஸ்பர வளப்படுத்தலுக்காக இணைந்து வருவதை சாத்தியப்படுத்தியிருக்கின்றார்கள். ஏனென்றால் பல்வேறு சமய பாரம்பரியங்களைக் கொண்டவர்கள் இணைந்து வாழ்ந்த வரலாற்றை கொண்டிருக்கின்றனர் மங்கோலிய மக்கள். பண்டைய வரலாற்று சிறப்புமிக்க பேரரசின் தலைநகரான கராகோர் பல்வேறு நம்பிக்கைகளுக்கு சொந்தமான வழிபாட்டு தளங்களை தனது எல்லைக்குள் கொண்டு பாராட்டத்தக்க நல்லிணக்கத்தின் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

நல்லிணக்கம் என்பது அழகானது

நல்லிணக்கம் என்பது ஒரு பொதுவான, அமைதியான வாழ்க்கையின் பார்வையில், திணிக்கப்படாமல் அல்லது ஒன்றிணைக்காமல், ஆனால் அவற்றின் வேறுபாடுகளுக்கு முழுமையான மரியாதையுடன், மாறுபட்ட உண்மைகளின் ஆக்கப்பூர்வமான இடையீட்டால் பிறந்த சிறப்பு உறவாகும்.

மற்றவர் எல்லோரையும் விட, விசுவாசிகளைவிட, யார் இந்த நல்லிணக்கப் பணிக்கு அழைக்கப்படுகிறார்கள்?

நமது சமய பாரம்பரியங்களின் சமூக முக்கியத்துவம் என்பது இப்பூமியில் நாம் வாழும் இடங்களில் மற்ற பயணிகளோடு நல்லிணக்கத்தில் வாழும் மற்றும் வளர்க்கும் நமது திறனைக்கொண்டே அளவிடப்படுகின்றது. ஞானி கொடுப்பதில் மகிழ்கிறான், அதன் வழியாக மட்டுமே மகிழ்ச்சி அடைகின்றான் என்கின்றது புத்தரின் ஞான பாதை. மேற்குறிப்பிட்ட சிந்தனையை புனித பிரான்சிஸ் அசிசியாரின் செபத்தால் உந்தப்பட்டு, ‘‘எங்கு பகைமை நிறைந்துள்ளதோ அங்கு அன்பையும், எங்கு கயமை நிறைந்துள்ளதோ அங்கு மன்னிப்பையும், எங்கு ஐயம் நிறைந்துள்ளதோ அங்கு விசவாசத்தையும் விதைத்திட அருள்தாரும் என்கிறார் புத்தர். பிறர்நலம் பேணுதல் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புகின்றது. எங்கெல்லாம் நல்லிணக்கம் இருக்கின்றதோ அங்கே நாம் புரிதலை, வளமையை மற்றும் அழகைக் காண்கின்றோம்.  நல்லிணக்கம் அழகிற்கு இணையான சிறந்த பெயர் எனலாம். குறுகிய தன்மை, ஒருதலைபட்சமான பணிச்சுமை, அடிப்படைவாதம், கருத்தியல் கட்டுப்பாடுகள் போன்றவைகள் மனித உடன்பிறந்த உறவை அழிக்கின்றன.

சமயங்கள் உலகிற்கு நல்லிணக்கத்தை அளிக்க அழைக்கப்படுகின்றன, தொழில்நுட்ப வளர்ச்சி இதனை கொடுக்காது. ஏனெனில் தொழில்நுட்ப வளர்ச்சி இவ்வுலகம் சார்ந்த சிந்தனையிலும், மனித குலத்தின் கிடைமட்ட பரிமாணத்திலும் விண்ணகத்தை மறந்துவிடும் அபாயத்தைக் கொண்டுள்ளது.  நாம் பண்டைய ஞான கல்வி சாலைகளின் தாழ்மையுள்ள வழித்தோன்றல்களாக இங்கே ஒன்றாக கூடியுள்ளோம். நமது இந்த  சந்திப்பில் மனித குலத்தை வளப்படுத்த நாம் பெற்றுக்கொண்ட நம்முடைய பெரும் புதையல்களிலிருந்து பகிர்ந்துகொள்ள விரும்புகின்றோம். ஆசியா கண்டத்தின் இதயத்தில் அமைந்துள்ள மங்கோலியா ஞானத்தின் ஆற்றலை பாரம்பரியமாகக் கொண்டிருக்கின்றது. இதனை உருவாக்க பல்வேறு சமயங்கள் உதவியுள்ளன. இதனை அனைவரும் வெளிப்படுத்த வேண்டும், ஒருவர் மற்றவரைப் பாராட்டி, ஊக்கமூட்ட வேண்டும் என்று விரும்புகின்றேன்.

நான் இங்குள்ள பாரம்பரிய உறைவிடங்களைக்கண்டு வியக்கின்றேன். இவைகள் மங்கோலிய மக்களின் இலட்சக் கணக்கான ஆண்டுகளின் வரலாற்று ஞானத்தின் வெளிப்பாடாக உள்ளது. வட்டக்கூடாரங்கள் தனது மனித முகத்தோடு தெய்வத்தன்மைக்கான திறந்த மனநிலையின் முக்கியகூறுகளையும்  வெளிப்படுத்துகின்றன. நமது ஒன்றிணைந்த வருகை நம்பிக்கை சாத்தியம் என்பதன் அறிகுறியாகும். விண்ணை நோக்கி நாம் எழுப்பும் செபங்கள் மற்றும் இப்பூமியில் நாம் அனுபவிக்கும் சகோதரத்துவம் நம்பிக்கையின் விதைகளை பரப்பட்டும். அனைவருக்கும் நன்றி

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 September 2023, 11:58