தேடுதல்

கர்தினாலாக லதாரியா உயர்த்தப்பட்டபோது கர்தினாலாக லதாரியா உயர்த்தப்பட்டபோது  (AFP or licensors)

விசுவாசக் கோட்பாட்டு திருப்பீடத்துறையில் திருத்தந்தை

திருத்தந்தையின் சந்திப்பு, திருப்பீடத்துறையிலிருந்து பணி ஓய்வுப் பெற்றுச் செல்லும் 79 வயதான இயேசுசபை கர்தினால் லதாரியா அவர்களுக்கு நன்றியை வெளியிடுவதாக இடம்பெற்றது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

விசுவாசக் கோட்பாடுகளுக்கான திருப்பீடத்துறையை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி செப்டம்பர் 5ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று சந்திக்கச் சென்ற திருத்தந்தை, அத்துறையின் தலைவர், கர்தினால் Luis Francisco Ladaria அவர்களை தனியாகச் சந்தித்து கலந்துரையாடியதுடன், அங்குள்ள அதிகாரிகளையும் சந்தித்து உரையாடினார்.

கர்தினால் Ladaria அவர்கள் விசுவாசக் கோட்பாட்டு திருப்பீடத்துறையின் தலைவராக ஆற்றியுள்ள பணிகளுக்கு தனிப்பட்ட முறையில் சென்று நன்றியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மங்கோலியாவில் திருதூதுப் பயணத்தை நிறைவுச் செய்து வத்திக்கான் திரும்பிய 24 மணி நேரத்திற்குள் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

செவ்வாய் காலை இத்தாலிய நேரம் 9 மணிக்கு எவ்வித முன்னறிவிப்பும் இன்றி இடம்பெற்ற இச்சந்திப்பு, இத்திருப்பீடத்துறையிலிருந்து பணி ஓய்வுப் பெற்றுச் செல்லும் 79 வயதான இயேசுசபை கர்தினால் லதாரியா அவர்களுக்கு நன்றியை வெளியிடுவதாக இடம்பெற்றது.

தற்போது கர்தினாலாக திருத்தந்தையால் அறிவிக்கப்பட்டுள்ள அர்ஜெண்டினாவின் பேராயர் விக்டர் மானுவல் பெர்னாண்டஸ் அவர்கள், செப்டம்பர் மத்தியில், விசுவாசக்கோட்பாடுகளுக்கான திருப்பீடத்துறையின் தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 September 2023, 13:55