தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

லிபியா மற்றும் மொரோக்கோவிற்காக செப விண்ணப்பம்

திருத்தந்தை : லிபியாவின் வெள்ளப்பெருக்கு மற்றும் மொரோக்கோவின் நில அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட இவ்விரு நாட்டு மக்கள் குறித்து தன் எண்ணங்கள் செல்கின்றன.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

லிபியாவின் வெள்ளப்பெருக்கு மற்றும் மொரோக்கோவின் நில அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட இவ்விரு நாட்டு மக்கள் குறித்து தன் எண்ணங்கள் செல்வதாகவும், அவர்களுக்காக அனைவரும் செபிக்குமாறு அழைப்புவிடுப்பதாகவும் அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மிகப்பெரும் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட லிபியாவில் பலர் இறந்தும் எண்ணற்றோர் காயமடைந்தும் உள்ளது குறித்து கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த மக்களுடன் நம் ஒருமைப்பாட்டை தெரிவிக்க மறக்க வேண்டாம் என்ற அழைப்பையும் முன்வைத்தார்.

மேலும், மொரோக்கோவில் இடம்பெற்ற நில அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட மக்களை நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவரும் அம்மக்களுக்காக இறைவேண்டல் செய்வோம் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்தார்.

இவ்வாரத் துவக்கத்தில் லிபியாவில் இடம்பெற்ற பெரும் மழை மற்றும் வெள்ளப் பெருக்கால் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் என செய்திகள் வந்துள்ள நிலையில், இறந்தவர்களின் உண்மையான எண்ணிக்கை 5000க்கும் மேல் இருக்கலாம் என செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

செப்டம்பர் 8ஆம் தேதி வெள்ளிக்கிழமை முன்னிரவில் மொரோக்கோவில் இடம்பெற்ற நில அதிர்ச்சியால் 2,900 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 5,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 September 2023, 12:55