தேடுதல்

திருத்தந்தையுடன் யெருசலேம் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை திருத்தந்தையுடன் யெருசலேம் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை  (ANSA)

திருத்தந்தையுடன் யெருசலேம் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை

யெருசலேமின் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையின் முதுபெரும் தந்தை மூன்றாம் தியோபிலஸ் அவர்கள், அக்கிறிஸ்தவ சபையின் 141வது முதுபெரும் தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

யெருசலேமின் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை மூன்றாம் தியோபிலஸ் மற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடையேயான சந்திப்பு திருப்பீடத்தில் செப்டம்பர் 29, வெள்ளியன்று இடம்பெற்றது.

இஸ்ராயேல், பாலஸ்தீனம், மற்றும் ஜோர்டான் பகுதிகளில் ஏறக்குறைய 1,30,000 அங்கத்தினர்களுடன், யெருசலேமை தலைமையிடமாகக் கொண்டுச் செயலாற்றிவரும் கிரேக்க ஆர்த்தடாகஸ் கிறிஸ்தவ சபை,  கி.பி. 451ஆம் ஆண்டிலிருந்து தனித்தியங்கும் ஒரு கீழை வழிபாட்டுமுறை ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையாக செயல்பட்டுவருகின்றது.

கீழை வழிபாட்டுமுறை ஒன்பது முதுபெரும் தந்தையர்களுள் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை அவர்கள் நான்காவது இடத்தை வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வெள்ளியன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்த யெருசலேமின் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையின் முதுபெரும் தந்தை மூன்றாம் தியோபிலஸ் அவர்கள், அக்கிறிஸ்தவ சபையின் 141வது முதுபெரும் தந்தையாவார்.

தற்போதைய முதுபெரும் தந்தை மூன்றாம் தியோபிலஸ் அவர்கள், 2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டு யெருசலேமின் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையை வழிநடத்திவருகிறார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 September 2023, 15:07