தேடுதல்

திருச்சிலுவை திருச்சிலுவை 

இயேசுவிடமிருந்து அனைத்தையும் கற்போம்

கடவுளிலிருந்து மனிதனாக, ஆவியிலிருந்து உடலாக என தன்னை மாற்றியவர் இறைமகனாம் இயேசு.

மெரினா ராஜ் - வத்திக்கான்

நம்மைக் காக்கும் இறைஇயேசுவிடமிருந்து நாம் அனைத்தையும் கற்றுக்கொள்வோம் என்றும், அவர் தன்னை வெறுமையாக்கி நம்மைக் காப்பாற்றியவர் என்றும் டுவிட்டர் குறுஞ்செய்தியில் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆகஸ்ட் 26, சனிக்கிழமை இயேசுவைப்போல நாம் மாற வேண்டும் என வலியுறுத்தி இவ்வாறு தனது கருத்துக்களை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மிகச்சிறியவர்களாகவும் ஏழைகளாகவும் இயேசுவை அடையாளப்படுத்துபவர்களிடமிருந்து நாம் நமது பணியைத் தொடங்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தன்னை வெறுமையாக்கி, பிறராக தன்னை அடையாளப்படுத்திய, நம்மைக் காப்பாற்றிய இறைவனிடம் இருந்துக் கற்றுக் கொள்வோம், அவர் கடவுளிலிருந்து மனிதனாக, ஆவியிலிருந்து உடலாக என தன்னை மாற்றியவர் என்றும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அவரைப் போல நாமும் பிறராக மாற, பிறரை நோக்கிச் செல்ல அவர் நம்மை அழைக்கிறார் என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இது நமது மீட்பிற்கான வழியாக மாறும் என்றும், மிகச்சிறியவர்களாக, ஏழைகளாக இருக்கும் கிறிஸ்துவைப் போன்றவர்களிடம் இருந்து அதற்கான பணியினை தொடங்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 August 2023, 14:57