தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

ஐரோப்பிய மக்கள் கட்சி அங்கத்தினர்களுக்கு திருத்தந்தையின் செய்தி

திருத்தந்தை - பாராளுமன்ற அங்கத்தினர்களுக்கும் குடிமக்களுக்கும் இடையேயான உறவு மேம்படவேண்டும், நிறுவனங்களுக்கும் குடிமக்களுக்கும் இடையே இடைவெளி குறைக்கப்படவேண்டும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

நல்அரசியலின் அனைத்து நிலைகளிலும் மனித உடன்பிறந்த நிலை என்ற கனவினைச் செயலாக்கம் பெறச் செய்ய வேண்டும் என ஐரோப்பிய பாராளுமன்றத்தின் ஐரோப்பிய மக்கள் கட்சி அங்கத்தினர்களுக்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்தவ அரசியல்வாதிகளின் கடமையுணர்வை இச்செய்தியில் வலியுறுத்தியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஐரோப்பிய பாராளுமன்றத்தில் உள்ள ஐரோப்பிய மக்கள் கட்சியின் தலைவரான Manfred Weber என்பவருக்கு இதனை அனுப்பியுள்ளார் 

திருத்தந்தையின் சந்திப்பு கடந்த வெள்ளியன்று இக்கட்சியின் ஐரோப்பிய பாராளுமன்ற அங்கத்தினர்களோடு இடம்பெற வேண்டியிருந்தது, திருத்தந்தையின் உடல்நிலை காரணமாக இரத்துச் செய்யப்பட்டதால் இச்செய்தி அக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த கிறிஸ்தவ மதிப்பீடுகளை உயர்த்திப் பிடிக்கும் ஐரோப்பிய மக்கள் கட்சிக்கு அனுப்பியுள்ளச் செய்தியில், கிறிஸ்தவ அரசியல்வாதிகளின் பொறுப்புணர்வு, கிறிஸ்தவ படிப்பினைகளை வழிகாட்டியாகக் கொண்டு செயல்படும் பாரம்பரியம், கலாச்சாரப் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்துச் செயல்படும் ஐரோப்பிய எடுத்துக்காட்டு, அரசியலில் மேன்மையானக் கண்ணோட்டம், உடன்பிறந்த உணர்வு நிலையை உயர்த்திப் பிடித்தல், அனைவருக்கும் மதிப்பு என்ற பல்வேறு தலைப்புக்களில் தன் சிந்தனைகளைப் பகிர்ந்துள்ளார்.

பாராளுமன்ற அங்கத்தினர்களுக்கும் குடிமக்களுக்கும் இடையேயான உறவு மேம்படவேண்டும், நிறுவனங்களுக்கும் குடிமக்களுக்கும் இடையேயான இடைவெளி குறைக்கப்படவேண்டும் எனவும் பாராளுமன்ற அங்கத்தினர்களுக்கான தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருஅவையின் சமூகப் படிப்பினைகள் அரசியல்வாதிகளுக்கு ஒரு வழிகாட்டும் ஏடாக இருக்கவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 June 2023, 15:12