தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  (ANSA)

வருங்காலத்திற்கு மனித உடன்பிறந்த நிலை முக்கியம்

இன்றைய உலகில் மனித குடும்பத்தின் வருங்காலம் என்பது மனித உடன்பிறந்த நிலை மற்றும் சமுதாய நட்புறவு என்னும் பாதையில் இருக்கிறது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

இவ்வுலகின் வருங்காலம் மனித உடன்பிறந்த நிலையை நாம் கடைப்பிடிப்பதைச் சார்ந்துள்ளது என ஜூன் 10, சனிக்கிழமையன்று, தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அனைத்தும் உலகமயமாக்கப்பட்ட இன்றைய உலகில் மனித குடும்பத்தின் வருங்காலம் என்பது மனித உடன்பிறந்த நிலை மற்றும் சமுதாய நட்புறவு என்னும் பாதையில் இருக்கிறது என்கிறார் திருத்தந்தை தன் செய்தியில்.

‘தனிமையில் இல்லை’ என்ற ஹேஷ்டாக்குடன் வெளியிடப்பட்டுள்ள திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி, ஜூன் 10, சனிக்கிழமையன்று உலகின் எட்டு நகரங்களுடன் தொலைக்காட்சி வழி நேரடி இணைப்புடன் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் Fratelli Tutti என்ற சுற்றுமடலைப் பின்னணியாகக் கொண்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 June 2023, 14:03