இயேசு, நம்மை ஒருபோதும் கைவிடாத இறைத்தந்தையின் கரம்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இயேசு நம்மை ஒருபோதும் கைவிடாத இறைத்தந்தையின் கரம் என்று ஜூன் 14, இப்புதனன்று வெளியிட்டுள்ள குறுஞ்செய்தி ஒன்றில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தனது டுவிட்டர் குறுஞ்செய்தியில் இவ்வாறு உரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு நம்மை ஒருபோதும் கைவிடாத இறைத்தந்தையின் கரம் மட்டுமல்ல, மாறாக, எப்போதும் நம் நன்மையை மட்டுமே விரும்பும் இறைத்தந்தையின் வலிமையும் உண்மையுமுள்ள கரமும் அவர்தான் என்றும் கூறியுள்ளார்.
ஜூன் 13, இச்செவ்வாயன்று, ஏழாவது உலக வறியோர் தினத்தை முன்னிட்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள செய்தியில், ஏழைகள் முகத்தில் எப்போதும் இறைவனைக் காண வேண்டும் எனவும், துன்ப துயரங்கள் சூழும் வேளைகளில் இறைவனின் அன்புக் கரம் எப்படியெல்லாம் நம்மைத் தாங்கி வழிநடத்துகிறது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்