தேடுதல்

நோபெல் விருதாளர்களுடன் திருப்பீடச்செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் நோபெல் விருதாளர்களுடன் திருப்பீடச்செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின்   (AFP or licensors)

அமைதி, உடன்பிறந்த உணர்வு நிலைக்காக உழைக்க வேண்டிய அவசியம்

நாம் சகோதரர் சகோதரிகள் என்பதையும், நம் இவ்வுலகப் பயணத்தின் அடிப்படையாக மனித உடன்பிறந்த நிலை உள்ளது என்பதையும் கண்டுகொள்வோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஜூன் 10, சனிக்கிழமையன்று மாலை வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் இடம்பெற்ற மனித உடன்பிறந்த நிலை குறித்த கூட்டத்திற்கு தன் வாழ்த்துச் செய்திகளை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நாமனைவரும் ஒன்றிணைந்து நடைபோடவேண்டும் என்பதையும், நாம் ஒவ்வொருவரும் சகோதரர் சகோதரிகள் என்பதையும், நம் இவ்வுலகப் பயணத்தின் அடிப்படையாக மனித உடன்பிறந்த நிலை உள்ளது என்பதையும் நாமனைவரும் கண்டுகொண்டு செயல்படவேண்டும் என வானகம் நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறது என தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மனித உடன்பிறந்த நிலை குறித்து வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் இடம்பெற்றக் கொண்டாட்டத்தில் 30 நொபேல் விருதாளர்கள் தயாரித்து கையெழுத்திட்ட மனித உடன்பிறந்த நிலை குறித்த அறிக்கைக் குறித்தும் தன் பாராட்டுக்களை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உரோம் நகரின் ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருவதால், திருத்தந்தையின் வாழ்த்துச் செய்தி, வத்திக்கான் நகருக்கான திருந்தந்தையின் பிரதிநிதி, கர்தினால் Mauro Gambetti அவர்களால் புனித பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த மக்களுக்கு வாசித்தளிக்கப்பட்டது.  

இத்தாலியின் Trappani நகர், கோங்கோ குடியரசு, மத்திய ஆப்பிரிக்க குடியரசு, எத்தியோப்பியா, அர்ஜெண்டீனா, இஸ்ராயேல், ஜப்பான் மற்றும் பெருவிலுள்ள பெரும் சதுக்கங்களுடன் தொலைக்காட்சி வழி இணைப்புடன் நடத்தப்பட்ட இக்கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் தன் வாழ்த்துக்களை வெளியிட்ட திருத்தந்தை, இவ்வுலகில் அமைதி மற்றும் உடன்பிறந்த உணர்வு நிலைக்காக உழைக்கவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த கூட்டத்தை துவக்கிவைத்து உரையாற்றிய திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், இன்றைய உலகிற்கு நம்பிக்கையும் உடன்பிறந்த உணர்வு நிலையும் தேவைப்படுகின்றன என்பதை சுட்டிக்காட்டினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 June 2023, 15:15