உடல்நிலையில் முன்னேற்றம் காணும் திருத்தந்தை பிரான்சிஸ்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இரத்தப் பரிசோதனை முடிவுகள் இயல்பானவை எனவும், அவர் தொடர்ந்து நலமடைந்து வருகிறார் எனவும் மருத்துவர்கள் கூறிவருவதாகத் திருப்பீடத் தகவல் தொடர்பு அறிக்கைத் தெரிவிக்கின்றது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஓய்வெடுத்தும், இறைவேண்டல் செய்தும், தன் கடமைகளை ஆற்றிவரும் வேளை, அவரது பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் இயல்பாக நடந்து வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர் என்று மேலும் தெரிவிக்கிறது அவ்வறிக்கை.
ஜூன் 13, இச்செவ்வாய், காலை நேரத்தை தனது பணிகளை ஆற்றுவதற்கும், வாசிப்பதற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செலவிட்டார் என்றும், மதிய உணவுக்கு முன் அவர் இறைவேண்டல் செய்ததாகவும், பின்னர் திருநற்கருணைப் உட்கொண்டதாகவும் கூறியுள்ளார் திருப்பீடத் தகவல் தொடர்பு இயக்குனர் மத்தேயோ புரூனி.
உரோம் நகரின் ஜெமெல்லி மருத்துவமனையில் ஜூன் 7, புதன்கிழமையன்று, குடலிறக்க நோய்க்காக அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பிறகு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடல்நிலை முன்னேற்றம் குறித்த அண்மைய அறிக்கை இதுவாகும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்