தேடுதல்

பாலர் தொழிலாளர்முறையை ஒழிப்பதற்கான போராட்டத்தில்  சென்னை சிறார் (கோப்புப்படம் 2022) பாலர் தொழிலாளர்முறையை ஒழிப்பதற்கான போராட்டத்தில் சென்னை சிறார் (கோப்புப்படம் 2022)  (AFP or licensors)

பாலர் தொழிலாளர்முறையை ஒழிப்பதற்கான முயற்சிகளைக் கைக்கொள்ள

திருத்தந்தையின் உருக்கமான வேண்டுகோள் - குழந்தைகளே, நம் நம்பிக்கை, அந்த நம்பிக்கையை மூச்சுத் திணற அனுமதித்து விடாதீர்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

நல்ல கல்வியைப் பெறவேண்டிய இவ்வுலகின் பல குழந்தைகள் பெரிய அளவில் சுரண்டப்பட்டு அடிமைத் தொழிலுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக கவலையை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூன் 12, திங்கள்கிழமையன்று உலகில் சிறப்பிக்கப்பட்ட பாலர் தொழிலாளர் குறித்த விழிப்புணர்வு நாளையொட்டி தன் டுவிட்டர் பக்கத்தில் இதனை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாலர் தொழிலாளர்முறையை ஒழிப்பதற்கான எந்த ஒரு முயற்சியையும் நாம் கைவிட்டுவிடக்கூடாது என அதில் அனைவரையும் விண்ணப்பித்துள்ளார்.

குழந்தைகளே நம் நம்பிக்கை, அந்த நம்பிக்கையை மூச்சுத் திணற அனுமதித்து விடாதீர்கள் என்ற உருக்கமான வேண்டுகோளையும் தன் டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 June 2023, 15:05