தேடுதல்

புனித பேதுரு பேராலயம் புனித பேதுரு பேராலயம்   (VATICAN MEDIA Divisione Foto)

திருத்தந்தையின் கோடைகால நிகழ்ச்சிகள் இரத்து!

கோடை காலத்தின் வழக்கத்திற்கு ஏற்ப, திருத்தந்தை திருப்பயணிகளுக்கு வழங்கும் அனைத்துப் புதன் மறைக்கல்வி உரைகளும், குறிப்பிட்ட குழுக்களைச் சந்திக்கும் நிகழ்ச்சிகளும் தற்காலிகமாக நடைபெறாது : திருப்பீடச் செய்தித் தொடர்பகம்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கோடை விடுமுறையின் காரணமாக, ஜூலை மாதம் முழுதும் திருத்தந்தையின் புதன் பொது மறைக்கல்வியுரை நடைபெறாது என்றும், இது மீண்டும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்றும் அறிவித்துள்ளது திருப்பீடச் செய்தித் தொடர்பகம்.

ஜூன் 28, புதனன்று, நடைபெறும் புதன் பொது மறைக்கல்வி உரைதான் இறுதி என்றும், ஆகஸ்ட் மாதம் 9-ஆம் தேதி புதன்கிழமை முதல் இது திட்டமிட்டபடி மீண்டும் தொடங்கும் என்றும் திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.

கோடை காலத்தின் வழக்கத்திற்கு ஏற்ப, திருத்தந்தையின் திருப்பயணிகளுக்கு வழங்கும் அனைத்துப்  புதன் மறைக்கல்வி உரைகளும், குறிப்பிட்ட குழுக்களைச் சந்திக்கும் நிகழ்ச்சிகளும் தற்காலிகமாக நடைபெறாது என்றும் கூறுகிறது அவ்வறிக்கை.

உரோம் நகரின் ஜெமெல்லி மருத்துவமனையில் ஜூன் 7, புதன்கிழமையன்று, குடலிறக்க நோய்க்காக அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஓய்வெடுக்கவும், குணமடையவும் அனுமதிக்கும் வகையில், ஜூன் 21, புதன்கிழமையன்று நடைபெறவிருந்த புதன்மறைக்கல்வி உரை இரத்து செய்யப்படுவதாக அறிவித்திருந்தார் திருப்பீடத் தகவல் தொடர்பு இயக்குநர் மத்தேயோ புரூனி.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 June 2023, 14:48