தேடுதல்

வத்திக்கான் வளாகத்தில் ‘தனிமையில் இல்லை’ நிகழ்வு வத்திக்கான் வளாகத்தில் ‘தனிமையில் இல்லை’ நிகழ்வு  

மனித உடன்பிறந்த நிலையின் ‘தனிமையில் இல்லை’ நிகழ்வு

அனைவரும் ஒரே குடும்பமாக, உடன் பிறந்த உறவு நிலையில் வாழவேண்டும் என்ற திருத்தந்தையின் கனவுக்கு ஆதரவும் ஊக்கமும் கொடுக்கும்விதமாகக் கூட்டம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

மனித உடன்பிறந்த நிலையைக் கொண்டாடும் ‘தனிமையில் இல்லை’ என்ற தலைப்பிலான உலக அளவிலானக் கூட்டம் ஜூன் 10, சனிக்கிழமையன்று வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் இடம்பெற்று வருகிறது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ‘அனைவரும் உடன்பிறந்தோர்’ என்னும் Fratelli Tutti சுற்றுமடலைப் பின்னணியாகக் கொண்டு வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் இடம்பெறும் இக்கூட்டத்தில் 30 நொபேல் விருதாளர்கள் முன்னிலையில் பாடல்களும் சான்று பகர்தல்களும், திறமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன.  

அனைவரும் ஒரே குடும்பமாக, உடன் பிறந்த உறவு நிலையில் வாழவேண்டும் என்ற திருத்தந்தையின் கனவுக்கு ஆதரவும் ஊக்கமும் கொடுக்கும்விதமாக ஏற்பாடுச் செய்யப்பட்ட இந்தக் கூட்டத்தில் உரையாடல்களின் அவசியம், ஒருமைப்பாடு, நீதி போன்றவைளை வலியுறுத்தும் நிகழ்ச்சிகளை ஊக்கப்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.

ஜூன் 10, சனிக்கிழமை காலை இடம்பெற்றக் கூட்டத்தில் இளையோர் மற்றும் மனிதாபிமான அமைப்புக்கள் ஒன்றிணைந்து மனித உடன்பிறந்த நிலை குறித்தக் கருத்துப் பரிமாற்றங்களில் கலந்துகொண்டனர்.

மனித உடன்பிறந்த நிலை குறித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கனவை நனவாக்க முயலும்  ‘தனிமையில் இல்லை’ என்ற தலைப்பிலான இந்தக் கூட்டத்தில் பல்வேறு கிறிஸ்தவ அமைப்புக்கள், கிறிஸ்தவ தொழிலாளர் இயக்கங்கள் உட்பட 76 அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.

வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் இடம்பெறும் இந்த கொண்டாட்டங்கள் உலகின் எட்டு பெரும் சதுக்கங்களோடு நேரடி தொலைக்காட்சி தொடர்பைக் கொண்டுள்ளன.

இத்தாலியின் Trappani நகர், காங்கோவின் Brazzaville, மத்திய ஆப்ரிக்க குடியரசின்  Bangui, எத்தியோப்பியா, அர்ஜெண்டினாவின் Buenos Aires, இஸ்ராயேலின் யெருசலேம், ஜப்பானின் நாகசாகி, பெருவின் லீமா ஆகியவைகளில் உள்ள வளாகங்களுடன் வத்திக்கான் தூய பேதுரு வளாகம் இந்தச் சிறப்பு நிகழ்ச்சியையொட்டி தொலைக்காட்சி வழி இணைக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 June 2023, 14:09