தேடுதல்

ஆறாம் பவுல் அரங்கத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் ஆறாம் பவுல் அரங்கத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்  (ANSA)

கடின முயற்சி மற்றும் விவேகத்துடன் கூடிய கல்விப்பயணம் விளையாட்டு

கடின முயற்சி மற்றும் விவேகம், தாக்குதல் மற்றும் தற்காப்பு ஆகியவற்றை ஒன்றாக வைத்து முன்னேறுங்கள் - திருத்தந்தை பிரான்சிஸ்

மெரினா ராஜ் - வத்திக்கான்

நல்ல விளையாட்டு என்பது தாக்குதல் மற்றும் தற்காத்தல் என்பவற்றின் சரியான இயக்கவியலில் இருந்து வருகிறது என்றும், கடினமுயற்சி மற்றும் விவேகத்தை நன்கு இணைத்து ஒரு கல்விப்பயணத்தில் விளையாட்டு நடைபெற வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 6 சனிக்கிழமை வத்திக்கானின் புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வந்திருந்த டென்னிஸ், படேல் என்னும் உள்புற மற்றும் வெளிப்புற மட்டைப்பந்து விளையாட்டின் 6ஆவது பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களைச் சந்தித்த போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

விளையாட்டு என்பது கல்வி மற்றும் பயிற்சியில் கவனம் செலுத்துவது என்றும்,  டென்னிஸ் அல்லது படேல் பயிற்சியாளர்கள், ஒரு தொழில்நுட்ப வல்லுநர்கள், கல்வியாளர்கள் என்றும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விளையாட்டில் தற்காப்புக்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றும், தாக்குதலுக்கான குணங்கள் மற்றும் பாதுகாப்பிற்கான குணங்கள் ஆகிய இரண்டும் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஆறாம் பவுல் அரங்கத்தில் கூடியிருந்தோர்.
ஆறாம் பவுல் அரங்கத்தில் கூடியிருந்தோர்.

ஒரு நல்ல கல்வியாளர் கடினமுயற்சி மற்றும் விவேகத்தை எவ்வாறு சமநிலைப்படுத்துவது என்பதை நன்கு அறிந்தவர் என்றும், மாணவன் இதுவரை இல்லாத ஒரு புதிய அனுபவத்தைப் பெற அனுமதிக்கும் போது அவன் வளர உதவும் வகையில், சுதந்திரமாகவும் அதேவேளையில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களால் கைவிடப்படாமல் காக்க வேண்டும் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பொழுதுபோக்கிற்காக விளையாடப்படும் விளையாட்டின் வழியாகக் கிடைக்கும் மகிழ்ச்சியைப் பறித்துக் கொள்ளவேண்டாம் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போட்டிமனப்பான்மை நல்லது என்றாலும், போட்டியின் இயக்கவியல் மேலோங்கினால், இது பல்வேறு வகையான சுயநலத்தைத் தூண்டி, விளையாட்டுப் பயிற்சியை அழித்து, கல்விக்கு முற்றிலும் நேர்மாறானதாக மாறிவிடும் என்றும் கூறினார்.

கடினமுயற்சி மற்றும் விவேகம், தாக்குதல் மற்றும் தற்காப்பு ஆகியவற்றை ஒன்றாக வைத்து முன்னேறுங்கள் என்று வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெற்றோர்கள் அல்லது கல்வியாளர்கள், குழந்தையைப் பாதுகாக்கவும், எதிர்பாராத நிகழ்வுகளைத் தவிர்க்கவும், எல்லா பிரச்சினைகளைத் தீர்க்கவும், முயற்சிக்கவேண்டும் என்றும், கூறினார்.

ஆறாம் பவுல் அரங்கத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்
ஆறாம் பவுல் அரங்கத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்

உண்மையான விவேகம், நல்ல பாதுகாப்பைப் போல, எப்போதும் நேர்மறையானது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எதிர்மறையான அணுகுமுறையாகக் கருதப்படும் தற்காப்பு என்பது தாக்குதலின் மற்றொரு வழி என்றும் டென்னிஸ், படேல் விளையாட்டில் கல்வி மற்றும் போட்டியின் வலிமை துல்லியமாக அதன் இயக்கவியலில் உள்ளது என்றும் பாராட்டினார்.

சிறுவர் மற்றும் சிறுமிகளின் திறன்கள் தொடர்பாக சூழ்நிலைகளை நன்கு மதிப்பிடுவதற்கு கல்வியில் விவேகம் இன்றியமையாதது என்று வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கல்வியாளர்கள் அச்சிறார்களை தற்காப்புகளில் பயிற்றுவிக்க வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 May 2023, 12:55