தேடுதல்

கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்   (ANSA)

பிறரன்பை ஊக்குவித்த திருத்தந்தையின் பயண உரைகள்

மனிதநேயத்தை வளர்ப்பதற்கும், இறைவனின் அன்பு மற்றும் மன்னிப்பின் அழகை அனைவரும் நுழைந்து அனுபவிக்க உதவும் ஒரு கதவாக இருக்கவும் அழைக்கப்படுகிறோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

ஹங்கேரியில் திருத்தந்தை மேற்கொண்ட மூன்று நாள் திருத்தூதுப்பயணத்தின்போது வழங்கிய உரைகளில், பிறரன்பு நடவடிக்கைகளுக்கான அழைப்பு மேலோங்கியிருந்ததாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏப்ரல் 28 வெள்ளிக்கிழமை காலை தனது 41ஆவது திருத்தூதுப் பயணத்தைத் தொடங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டிற்கான தன் முதல் உரையில், கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்பவர்கள், நம்பிக்கையின் அடிப்பைடையில் நற்செய்தியால் ஈர்க்கப்பட்ட மனிதநேயத்தை வளர்ப்பதற்கும், தந்தையின் அன்பான குழந்தைகளாக நம்மை ஏற்றுக்கொண்டு சகோதரர் சகோதரிகளாக ஒருவரையொருவர் அன்புகூர்வதற்கும், ஒருவருக்கொருவர் சான்றுபகர்வதற்கும் அழைக்கப்படுகிறார்கள் என்பதை வலியுறுத்தினார்.

ஏப்ரல் 29, சனிக்கிழமையன்று, ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரிலுள்ள புனித எலிசபெத் ஆலயத்தில் ஏழைகள் மற்றும் புலம்பெயர்ந்தோரை சந்தித்த வேளை,  அனைவரிடமும் குறிப்பாக, வறுமை, நோய் மற்றும் துயரத்தின் வலியை அனுபவிப்பவர்கள் மீது இரக்கம் காட்டுதல் வழியாக, சாட்சிய வாழ்வை நாமும் வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிறரன்பு மொழியில் சரளமாகப் பேசக்கூடிய ஒரு திருஅவை நமக்குத் தேவை என எடுத்துரைத்தார்.

ஏப்ரல் 30, ஞாயிறு திருப்பலியில் திருத்தந்தை வழங்கிய மறையுரையில், நமது வார்த்தைகளிலும், செயல்களிலும், அன்றாட நடவடிக்கைகளிலும், இயேசுவைப் போல, ஒரு திறந்த கதவாக இருப்போம் எனவும், இறைவனின் அன்பு மற்றும் மன்னிப்பின் அழகை அனைவரும் நுழைந்து அனுபவிக்க உதவும் ஒரு கதவாக இருக்க முயற்சிப்போம் எனவும் கேட்டுக்கொண்டார்

அதே நாளில் ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரின் அருகிலுள்ள Péter Pázmány கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் கல்வி மற்றும் கலாச்சார உலகத்தினரை சந்தித்தபோது, உண்மையை அணுகுவதற்கான திறவுகோல் அன்பிலிருந்து ஒருபோதும் பிரிக்கப்படாத அறிவின் ஒரு வடிவமாக இருந்து, உறவு, மனத்தாழ்மை மற்றும் திறந்த, உறுதியான, வகுப்புவாத, துணிவான மற்றும் ஆக்கபூர்வமான அறிவைக் குறிக்கிறது எனவும், இதனை எடுத்துரைப்பதற்கும் நம்பிக்கையை வளர்ப்பதற்கும்தான் பல்கலைக்கழகங்கள் அழைக்கப்படுகின்றன எனவும் தனது உரையில் குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 May 2023, 13:23