தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

அன்னையர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் : திருத்தந்தை பிரான்சிஸ்

குழந்தைகளை வளர்த்தெடுப்பதிலும், விலைமதிப்பிட முடியாதவகையில் பணியாற்றுவதிலும், குடும்ப மதிப்பீடுகளைப் பாதுகாப்பதிலும் தங்களை முழுமையாக அர்ப்பணித்துகொண்டவர்கள்தாம் அன்னையர்கள் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம்- வத்திக்கான்

இன்னும் நம்முடன் இருப்பவர்கள் மற்றும் இறைபதம் அடைந்த அன்னையர்கள் அனைவரையும் நன்றியுடனும் பாசத்துடனும் நினைவு கூர்வோம் என்றும், இயேசுவின் தாயாம் அன்னை மரியாவிடம் அவர்களை ஒப்படைப்போம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

மே 14, இஞ்ஞாயிறன்று, உலகின் பல நாடுகளில் அன்னையர் தினம் சிறப்பிக்கப்பட்ட வேளை, புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு அல்லேலூயா வாழ்த்தொலி செபவுரை வழங்கிய பிறகு இவ்வாழ்த்துக்களை மகிழ்வுடன் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளிடம், குழந்தைகளை வளர்த்தெடுப்பதிலும், விலைமதிப்பிட முடியாதவகையில் பணியாற்றுவதிலும், குடும்ப மதிப்பீடுகளைப் பாதுகாப்பதிலும் தங்களை முழுமையாக அர்ப்பணித்துள்ள அனைத்து அன்னையர்களுக்கும் கரவொலி எழுப்பி வாழ்த்துகளைத் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 May 2023, 15:06