சிறு செபங்கள் வழியாக ஆன்மிக வாழ்வை பலப்படுத்திக்கொள்ளுங்கள்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இறைவேண்டல் செய்வதற்கு உங்களுக்கு அதிக நேரம் இல்லையென்றால்,
உங்களுக்கு உதவக்கூடிய அறிவாற்றல் நிறைந்த ஆன்மிகப் பயிற்சி ஒன்று உள்ளது என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மே 5, இவ்வெள்ளியன்று, தான் வெளியிட்டுள்ள குறுஞ்செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெரும்பாலும் நாள் முழுவதும், நீங்கள் இறைவனுடன் இணக்கமாக இருக்க, 'உளவிருப்பங்கள்' (aspirations) என்று அழைக்கப்படும் மிகக் குறுகிய இறைவேண்டல்களை நீங்கள் மீண்டும் செய்யலாம் என்றும் வழிகாட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இறைவேண்டல் என்பது வாழ்க்கை
ஏப்ரல் 29, சனிக்கிழமையன்று, ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நிகழ்ந்த இளையோர் சந்திப்பின்போது, "நீங்கள் இறைவேண்டல் செய்யும்போது, உங்கள் உணர்வுகள் மற்றும் அச்சங்கள், உங்கள் பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புகள், உங்கள் நினைவுகள் மற்றும் நம்பிக்கைகள் என உங்கள் வாழ்க்கையில் நிகழும் அனைத்தையும் இயேசுவிடம் கொண்டு வர அஞ்சவேண்டாம் என்று உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவேண்டல் என்பது உரையாடல், இறைவேண்டல் என்பது வாழ்க்கை என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்றும் வலியுறுத்திக் கூறியதை இக்கணம் நினைவுகூர்வோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்