தேடுதல்

உக்ரைனில் சிதிலமடைந்த கட்டிடங்கள் வழியே பயணிக்கும் அருள்பணியாளர் உக்ரைனில் சிதிலமடைந்த கட்டிடங்கள் வழியே பயணிக்கும் அருள்பணியாளர்  

துயருறும் உக்ரைனில் அமைதி திரும்ப வேண்டுவோம்!

செபமாலை என்பது, நம் இதயங்களில் உண்மையான அமைதியைப் பெறுவதற்கான ஒரு பயனுள்ள வழிமுறை : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

போரினால் அதிகம் துயருறும் உக்ரைன் நாட்டை இறைபதம் ஒப்புக்கொடுப்போம் என்றும், அங்குக் காயமடைந்தவர்கள், குழந்தைகள், இறந்தவர்கள் அனைவர்மீதும் இறைவனின் அமைதி திரும்ப இறைவேண்டல் செய்வோம் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 17, இப்புதனன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் தான் வழங்கிய புதன் பொதுமறைக்கல்வி உரைக்குப் பின்பு, அங்குக் கூடியிருந்த பல்வேறு நாட்டுத் திருப்பயணிகளிடம் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும் போரின் காரணமாக உக்ரைனில் ஒவ்வொரு நாளும் துயருற்று வரும் மக்களை அன்னை மரியாவிடம் அர்ப்பணித்து அவர்களுக்காக இறைவேண்டல் செய்வோம் என்றும் விண்ணப்பித்தார்.

அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இம்மேமாதத்தில் செபமாலையின் வல்லமையைத் திருப்பயணிகளிடம் எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், செபமாலை என்பது நமது மீட்பின் முழு வரலாற்றுத் தொகுப்பு என்றும், தீமைக்கு எதிராக அதுவொரு வலிமைவாய்ந்த ஆயுதம் என்றும், நம் இதயங்களில் உண்மையான அமைதியைப் பெறுவதற்கான ஒரு பயனுள்ள வழிமுறை என்றும் எடுத்துக்காட்டினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 May 2023, 13:43