தேடுதல்

சிறாரைச் சந்திக்கும் திருத்தந்தை சிறாரைச் சந்திக்கும் திருத்தந்தை  

கடவுள் என்றும் நோயாளிகள் அருகில் இருந்து அன்புகூர்கிறார்

நோய் துன்பங்களால் சோர்வடையும் வேளைகளில் இயேசு நம் அருகில் இருந்து நமக்கு நம்பிக்கையைக் கொடுப்பது மட்டுமல்ல, நாம் நம் வாழ்வு வழி சான்றுபகர எதிர்பார்க்கிறார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

கடவுள் என்றும் நோயாளிகள் அருகில் இருந்து அவர்களை அன்புகூர்கிறார், என போலந்திலிருந்து தன்னை சந்திக்க வந்திருந்த, புற்றுயால் பாதிக்கப்பட்ட போலந்து சிராரை திருப்பீடத்தில் சந்தித்தபோது கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நம் துன்பவேளைகளில் இயேசு நம் அருகில் இருந்து நமக்கு நம்பிக்கையூட்டிக் கொண்டிருக்கிறார் என போலந்து சிறாருக்கு ஊக்கமளித்த திருத்தந்தை, புற்று நோயால் பாதிக்கப்பட்ட அந்த 53 சிறாருக்கு ஆறுதல் வார்த்தைகளையும் தெரிவித்தார்.

பல்வேறுத் துயர்களை எதிர்கொண்டு, வாழ்வில் இதற்கு மேல் செல்ல முடியாது என சோர்வடையும் வேளைகளில் எல்லாம் இயேசு நம் அருகில் இருந்து நமக்கு நம்பிக்கையைக் கொடுப்பது மட்டுமல்ல, நாம் நம் வாழ்வு வழி சான்றுபகர வேண்டும் என எதிர்பார்க்கின்றார் என போலந்து சிறாரிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நாம் தனிமையிலிருக்கும்போதும், மற்றவர்களால் கைவிடப்பட்டுள்ளோம் என எண்ணும்போதும், முக்கியமாக, நோயின் அனைத்துப் பிரச்சனைகளின் பாரத்தை நாம் உணரும்போது அன்னை மரியா நம் அருகில் இருக்கின்றார், அதுவும் தாய்மைக்குரிய கனிவுடன் நம்மருகே இருக்கின்றார் என்பதை நினைவில் கொள்வோம் என, புற்று நோயால் பாதிக்கப்பட்ட போலந்து சிறாரிடம் மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 May 2023, 15:10