தேடுதல்

அஸ்தி மறைமாவட்டத் திருப்பயணிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அஸ்தி மறைமாவட்டத் திருப்பயணிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ்   (Vatican Media)

இயேசுவின் அன்பு, திருக்குடும்பத்தைப் புதுப்பித்தது : திருத்தந்தை

பல்வேறு ஆபத்தான மற்றும் சவால்கள் நிறைந்த சூழல்கள் மத்தியிலும் நமதாண்டவர் இயேசு தனது திருக்குடும்பத்தைப் புதுப்பித்து மாற்றினார் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

குடும்ப வாழ்வின் மாற்றங்கள், மதிப்பீடுகள், விழுமியங்கள் யாவும் இயேசு கிறிஸ்து ஒருவரால் மட்டுமே இவ்வுலகிற்குக் கொண்டுவரப்பட்டன என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 5, இவ்வெள்ளியன்று, வட இத்தாலியிலுள்ள அஸ்தி (Asti) மறைமாவட்டத் திருப்பயணிகளுக்கு வழங்கிய உரையில் இவ்வாறு உரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல கடினமானச் சூழல்கள் மத்தியிலும் அவர்களின் குடும்பங்களின் முன்னேற்றம் கண்டு தான் பெரிதும் மகிழ்வதாகவும் கூறினார்.

பல்வேறு ஆபத்தான மற்றும் சவால்கள் நிறைந்த சூழல்களில், நமதாண்டவர் இயேசுவும் தனது திருக்குடும்பத்தை புதுப்பித்து மாற்றினார் என்று எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “உம் தாயும் சகோதரர்களும் சகோதரிகளும் வெளியே நின்று கொண்டு உம்மைத் தேடுகிறார்கள்” என்று கூட்டத்தினர் அவரிடம் கூறியபோது, “கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்”  (காண்க. மத் 12:46-50; மாற் 3:31-35;லூக் 8:19-21) என்று இயேசு கூறியதாக ஒத்தமை நற்செய்திகள் நமக்கு எடுத்துரைக்கின்றன என்றும் விளக்கினார்.

இயேசுவின் அன்பு குடும்பத்தை மாற்றுகிறது, அவ்வன்பு, மனித நிலையிலிருந்தும் பாவத்திலிருந்தும் உருவான சுயநலத்தின் இயக்கவியலில் இருந்தும் அதனை விடுவித்து, உறவின் நலன்கள் மற்றும் மரபுகளால் ஆதிக்கம் செலுத்தாத, வலுவான ஆனால், சுதந்திரமான ஒரு புதிய பிணைப்புடன் அதை வளப்படுத்துகிறது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 May 2023, 13:48