தேடுதல்

நார்விச்சின் அன்னை ஜூலியன் நார்விச்சின் அன்னை ஜூலியன்  

அன்னை ஜூலியனின் 650 ஆண்டு நிறைவிற்கு திருத்தந்தையின் செய்தி

நார்விச்சின் ஜூலியன், 1373-ஆம் ஆண்டில் கிறிஸ்துவின் பாடுகளின் தொடர் காட்சியையும் காய வரங்களையும் பெற்றவர்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

பல்வேறு திருஅவைக் கொண்டாட்டங்களில் பங்கேற்பவர்களுடன் தனது ஆன்மிக நெருக்கத்தை உறுதியளிப்பதாகவும், ஆன்மிக ஆலோசனை மற்றும் ஊக்கத்தை நாடுபவர்களை வரவேற்பதில் அன்னை ஜூலியனின் பெருந்தன்மை குறிப்பிடத்தக்கது என்றும் கிழக்கு ஆங்கிலிக்கன் பேராயர் Peter Collins அவர்களுக்கு அனுப்பியுள்ள செய்தி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்துவின் பாடுகளின் வெளிப்பாடு என்றழைக்கப்படும் நார்விச்சின் அன்னை ஜூலியன் ஷிவிங்ஸ் அவர்களின் 650 -வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் கத்தோலிக்க மற்றும் ஆங்கிலிக்கன் திருப்பயணிகளுக்கு  அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்னை ஜூலியனின் கடவுள் இரக்கம் பற்றிய செய்தி இன்றைய உலகிற்கு இன்றியமையாததாகத் திகழ்கின்றது என்றும் எடுத்துரைத்துள்ளார்.

நார்விச்சின் அன்னை ஜூலியனின் 650-வது ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில், ஆங்கிலேய நகரமான நார்விச்சின் கத்தோலிக்க மற்றும் ஆங்கிலிக்கன் பேராலயங்களுக்கு உலகம் முழுவதிலுமிருந்து கூடிவரும் திருப்பயணிகளுக்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "மற்றவர்களுக்காகத் தன் வசதியை தியாகம் செய்த அன்னை ஜூலியனின் பண்பு நலன்களையும் பாராட்டியுள்ளார்.

அன்னை ஜூலியன்
அன்னை ஜூலியன்

உலகில் அதிகப் பொருள் வசதியுள்ள நாடுகளில் பலர் உணரும் தனிமை, உள்ளூர் பிரச்சினைகள், ஆன்மிக ஆலோசனை மற்றும் ஊக்கத்தை நாடுபவர்களை வரவேற்பதில் ஜூலியனின் பெருந்தன்மை குறிப்பிடத்தக்கது என்றும் அச்செய்தியில் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்னை ஜூலியனின் எழுத்துக்கள் கிறிஸ்தவ பாரம்பரியத்திற்கான ஆங்கில மறைபொருளின் ஆழமான முக்கியத்துவமாகப் பல நூற்றாண்டுகளாக நம்மிடையேப் பேசப்படுகின்றன என்றும், மேலும் மேலும் அங்கீகரிக்கப்பட்டு கொண்டாடப்படுகின்றது என்றும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலியனின் மரபு, தாய்வழிப் பாரம்பரியம், செல்வாக்கு, பணிவு, ஆழமான இறையியல் நுண்ணறிவு, கடவுளன்பு, நம்பிக்கை, தேவையில் இருக்கும் சகோதரர் சகோதரிகளுக்கான தாராளமான பணியில் வெளிப்படுத்தப்படும் வாழ்க்கையின் தூய்மை ஆகியவை கிறிஸ்துவின் சீடர்கள் என்பதை வெளிப்படுத்துகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

போர், அநீதி, சுற்றுச்சூழல் பேரழிவு ஆன்மிக வறுமை போன்ற அழுத்தமான சவால்களை எதிர்கொள்ளும் அனைவரும், இந்த நீடித்த ஞான வார்த்தைகளால் ஆறுதல் பெறவும் பலப்படுத்தப்படவும் தான் செபிப்பதாக்க கூறி தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அச்செய்தியில் அளித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆங்கிலத் தொகுப்பாளராக இருந்த நார்விச்சின் ஜூலியன், 1373 -ஆம் ஆண்டில் கிறிஸ்துவின் பாடுகளின் தொடர் காட்சியையும் காய வரங்களையும் பெற்றார். அவரது எழுத்துக்கள் தெய்வீக அன்பின் வெளிப்பாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. ஒரு பெண்ணின் ஆங்கில மொழி படைப்புகளான இவைகள் ஆன்மிகத்தின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 May 2023, 11:58