தேடுதல்

வானத்தில் பறவைகள் வானத்தில் பறவைகள்  (AFP or licensors)

தூய ஆவியானவர் என்றும் நம்மோடு

கடவுள் உறவின் பிறப்பிடமான தூய ஆவியினால், கடவுளின் துணையுடன் நாம் துன்பம் மற்றும் இறப்பிலிருந்து வெற்றி பெற முடியும்

மெரினா ராஜ் – வத்திக்கான்

தூய ஆவியானவர் கடவுளோடு நமக்குள்ள உறவை உருவாக்குபவர் என்றும், போராட்டங்கள், தோல்விகள், மற்றும் தனிமையில் நாம் சோர்ந்து போகாமல் இருக்க நம்முடன் எப்போதும் உடன் இருக்கின்றார் என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 28 ஞாயிற்றுக்கிழமை தூயஆவியார் பெருவிழாவைத் திருஅவை சிறப்பிக்க உள்ள நிலையில் தூயஆவியாரின் உடனிருப்பை வலியுருத்தி இவ்வாறு தனது கருத்துக்களைப் பதிவு செய்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூயஆவி மகிழ்ச்சியின் ஊற்று என்றும் குறிப்பிட்டுள்ளார்.

என்றும் நம்முடன் இருப்பதால் நம்முடைய போரட்டங்கள், தோல்விகள், இருண்ட இரவுகளான துன்பங்களில் நாம் தனியாக தொலைந்து போகாமல், தோற்கடிக்கப்படாமல், இருக்கிறோம் என்றும் மகிழ்ச்சியின் ஊற்றும் கடவுள் உறவின் பிறப்பிடமுமான தூய ஆவியினால், கடவுளின் துணையுடன் நாம்  துன்பம் மற்றும் இறப்பிலிருந்து வெற்றி பெற முடியும் என்றும் அக்குறுஞ்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 மே 2023, 13:46