தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (VATICAN MEDIA Divisione Foto)

எதிரிகளாக அல்லாமல் சகோதரர்களாக வாழ்கிறீர்கள் : திருத்தந்தை

இளையோரே, உங்களின் எடுத்துக்காட்டான வாழ்க்கை, அரசியல் பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு அமைதியின் நோக்கத்தை ஏற்படுத்தட்டும் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

சகோதரர்களாக ஒன்றித்து வாழும் இளம் உக்ரேனியர்கள் மற்றும் இரஷ்யர்களுக்கு எனது நன்றி என்றும், இம்முயற்சி அரசியல்வாதிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 31, இப்புதனன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய புதன் பொதுமறைக்கல்வி உரைக்குப் பின்பு, Rondine Cittadella della Pace என்ற அமைப்பினருடன் வந்திருந்த இருநாட்டு இளையோரையும் சந்தித்தபோது இவ்வாறு உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "நீங்கள் எதிரிகளாக வாழாமல், சகோதரர்களாக வாழ முடிவு செய்துள்ளீர்கள்" என்றும் பாராட்டினார்.

உங்களின் இந்த எடுத்துக்காட்டான வாழ்க்கை, அரசியல் பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு அமைதியின் நோக்கத்தை ஏற்படுத்தட்டும் என்றும், உக்ரைனில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள அனைவரையும் அன்னை மரியாவிடம் ஒப்படைத்து, துயருறும் அந்நாட்டு மக்களுக்காகத் தொடர்ந்து இறைவேண்டல் செய்யும்படியும் அவ்விளையோரிடம் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 May 2023, 12:47