தேடுதல்

பிறரன்பு பணியின் மறைபரப்பு சபை சகோதரிகளைச் சந்திக்கும் திருத்தந்தை பிறரன்பு பணியின் மறைபரப்பு சபை சகோதரிகளைச் சந்திக்கும் திருத்தந்தை   (Vatican Media)

கிறிஸ்துவுடன் முழுமையாக ஒன்றித்திருங்கள் : திருத்தந்தை பிரான்சிஸ

நல்ல அன்னையர்களைப் போல, இரக்கத்துடனும், படைப்பாற்றலுடனும், கற்பனை வளத்துடனும், பிறரன்புப் பணியாற்றுங்கள் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உங்கள் இல்லங்களும் பணியாற்றும் இடங்களும் அன்னையின் அரவணைப்பால் நிறைந்திருக்கட்டும்! என்றும், உங்கள் இதயத்தில் எரியும் சுடரொளி அனைவரும் அறிவொளி பெறுவதற்கு உதவட்டும் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 25, இவ்வியாழனன்று, பிறரன்பு பணியின் மறைபரப்பு சபை சகோதரிகளை (Daughters of Don Orione) அவர்தம் 13-வது பொதுப்பேரவையை முன்னிட்டு திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சபையின் நிறுவுநரான புனித Louis Orione-வின் வாழ்விலிருந்து மூன்று காரியங்களை எடுத்துக்காட்டினார்.

கிறிஸ்துவுடன் ஒன்றித்திருத்தல்

உங்கள் சபையின் நிறுவுனர் புனித Louis Orione போன்று என்றும் கிறிஸ்துவுடன் ஒன்றிணைந்திருங்கள் என்று அறிவுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உங்கள் துறவு வாழ்வில் கிறிஸ்துவுடன் ஒன்றிணைவது எல்லா செயல்பாட்டிற்கும் ஆணிவேராக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஆகவே, நீங்கள் எப்பொழுதும் முதலில் ஆண்டவரால் அவருடைய உயிருள்ள பிரசன்னத்தின் வழியாக அவருடைய வார்த்தையில், தூய ஆவியானவர் துணையில் ஒன்றித்திருங்கள் என்றும் அழைப்புவிடுத்தார்.

சகோதரர் சகோதரிகளுடன் ஒன்றிப்பு

இரண்டாவதாக, உங்கள் பணியில் அனைத்து சகோதரர் சகோதரிகளுடனும் நெருக்கமாக இருக்க வேண்டும். ஏனென்றால்,   ‘மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் (மத் 25:40) என்று இயேசுவே கூறியிருக்கிறார் என்றும் எடுத்துக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உங்கள் இல்லங்களும் பணியாற்றும் இடங்களும் அன்னையின் அரவணைப்பால் நிறைந்திருக்கட்டும்! என்றும், உங்கள் இதயத்தில் எரியும் சுடரொளி அனைவரும் அறிவொளி பெறுவதற்கு உதவட்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

கடினமாக உழையுங்கள்

உங்கள் நிறுவுனர் புனித Louis Orione 'கடினமாக உழைக்க கற்றுக் கொடுத்தார். 'ஏழைகள், சிறியவர்கள், ஒவ்வொரு தீமை மற்றும் வலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல அன்னையர்களைப் போல, இரக்கத்துடனும், படைப்பாற்றலுடனும், கற்பனையுடனும், பிறரன்பு பணியாற்றுங்கள் என்றும் விண்ணப்பித்தார் செய்யுங்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 May 2023, 14:53