தேடுதல்

இத்தாலிய அரசுத்தலைவர் செர்ஜோ மத்தரெல்லா இத்தாலிய அரசுத்தலைவர் செர்ஜோ மத்தரெல்லா   (ANSA)

2023ஆம் ஆண்டிற்கான புனித ஆறாம் பவுல் அனைத்துலக விருது

கடந்த ஏப்ரல் 19 புதன்கிழமை, வத்திக்கான் செய்தியாளர் கூட்டத்தின் போது, 2023 ஆம் ஆண்டிற்கான புனித ஆறாம் பவுல் அனைத்துலக விருது அறிவிக்கப்பட்ட நிலையில் வரும் திங்களன்று அவ்விருதானது வழங்கப்பட்ட உள்ளது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

2023ஆம் ஆண்டிற்கான புனித ஆறாம் பவுல் அனைத்துலக விருதினை இத்தாலிய அரசுத்தலைவர் செர்ஜோ மத்தரெல்லா அவர்களுக்கு வழங்க உள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 29 திங்கள் கிழமை வத்திக்கானின் சாந்தா கிளமெந்தினா அறையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் வழங்கப்பட இருக்கும் இவ்விருதானது, திருத்தந்தை புனித ஆறாம் பவுல் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டதன் 60ஆவது ஆண்டினை முன்னிட்டு பிரேசியாவின் ஆறாம் பவுல் நிறுவனத்தால் வழங்கப்படுகின்றது.

கடந்த ஏப்ரல் 19 புதன்கிழமை, வத்திக்கான் செய்தியாளர் கூட்டத்தின் போது, 2023 ஆம் ஆண்டிற்கான புனித ஆறாம் பவுல் அனைத்துலக விருது அறிவிக்கப்பட்ட நிலையில் வரும் திங்களன்று அவ்விருதானது வழங்கப்பட்ட உள்ளது.

பிரேசியாவின் ஆறாம் பவுல் கிறிஸ்தவக் கல்வி நிறுவனத்தின் முன்முயற்சியினால் கொடுக்கப்படும் இவ்விருதானது  கலாச்சாரம், உடன்பிறந்த வாழ்வு, மிகச்சிறந்த ஆளுமை, இசை, தத்துவம், இறையியல், கல்வி போன்றவற்றிற்காக வழங்கப்படுகின்றது.

கடந்த ஆண்டுகளில் இறையியல் ஆய்வுகளுக்காக Hans Urs von Balthasar 1984 ஆம் ஆண்டிலும், இசைக்காக Olivier Messiaen 1988 ஆம் ஆண்டிலும், ஒன்றிப்பிற்காக Oscar Cullmann 1993 ஆம் ஆண்டிலும், தத்துவத்திற்காக Paul Ricoeur 2003 ஆம் ஆண்டிலும் கல்விக்காக Sources Chrétiennes 2009 ஆம் ஆண்டிலும் விருதினைப் பெற்றுள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இவ்விருது மீண்டும் இவ்வாண்டு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 May 2023, 13:44