தேடுதல்

ஆயர்  Alwin ஆயர் Alwin 

இந்தியாவின் மும்பை துணைஆயர் Allwyn D'Silva இராஜினாமா ஏற்பு

21 ஆண்டுகள் குருத்துவ வாழ்வில் மும்பை சேரிப்பகுதிகளில் பணியாற்றியவர். மனித உரிமைகள், சமூக அக்கறைகள் மற்றும் உள்ளூர், மாவட்ட மற்றும் தேசிய சுற்றுச்சூழல் விடயங்களில் ஆழமாக ஈடுபடுபவர்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

இந்தியாவின் மும்பை துணைஆயர் Allwyn D'Silva அவர்களின் இராஜினாமை ஏற்றுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 13, சனிக்கிழமை, வெளியிடப்பட்ட திருப்பீடத்துறையின் அறிக்கையில் 75 வயதான Dura மறைமாவட்ட பட்டம்சார் ஆயர் (Titular Bishop) Allwyn D'Silva, அவர்களின் இராஜினாமாவை ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

1948-ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ஆம் நாள் மும்பையில் உள்ள  அம்போலியில் பிறந்த ஆயர் Allwyn D'Silva அவர்கள், 1975-ஆம் ஆண்டு ஏப்ரல் 19-ஆம் நாள் மும்பை அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். 2016-ஆம் ஆண்டு, மும்பை துணை ஆயராகவும், Dura மறைமாவட்ட பட்டம்சார் ஆயராகவும் (Titular Bishop) நியமிக்கப்பட்டார். 2017-ஆம் ஆண்டு மும்பை துணைஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். 

2016 டிசம்பர் 20, அன்று ஆயராக நியமனம் வந்தபோது, அவர் மும்பையின் மேற்குப் பகுதியில் உள்ள தானே, புனித திருமுழுக்கு யோவான் ஆலயத்தில் பங்குகுருவாக பணியாற்றிக் கொண்டிருந்தார்.

மும்பை பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர் இவர். தனது 21 ஆண்டுகள் குருத்துவ வாழ்வில் மும்பை சேரிப்பகுதிகளில் பணியாற்றியவர். மனித உரிமைகள், சமூக அக்கறைகள் மற்றும் உள்ளூர், மாவட்ட மற்றும் தேசிய சுற்றுச்சூழல் விடயங்களில் ஆழமாக ஈடுபடுபவர்.

ஆசிய ஆயர் பேரவைகளின் (FABC) காலநிலை மாற்ற கூட்டத்தின் செயலாளராகவும் மும்பை உயர் மறைமாவட்ட அருள்பணித்துவ மாணவர்களுக்கான  (visiting professor) பேராசிரியராகவும் பணியாற்றியவர்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 May 2023, 13:50