Zamboanga பேராயராக Julius Sullan Tonel நியமனம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
பிலிப்பீன்சீன் ஐபில் மறைமாவட்டத்தின் ஆயர் Julius Sullan Tonel அவர்களை Zamboanga உயர்மறைமாவட்டத்தின் பேராயராக நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏப்ரல் 25, செவ்வாய்க்கிழமை, திருப்பீடத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையானது பிலிப்பீன்சீன் பெருநகரமான Zamboanga உயர்மறைமாவட்டத்திற்கான பேராயராக ஆயர் Julius Sullan Tonel அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றது.
1956 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் நாள் பிலிப்பீன்சீன் டாவோ நகரில் பிறந்த ஆயர் Julius Sullan Tonel அவர்கள், டாவோ மற்றும் மணிலாவில் உள்ள குருத்துவப் பயிற்சி இல்லத்தில் பயின்று 1980 ஆம் ஆண்டு, ஏப்ரல் 12 ஆம் நாள் டாவோவின் உயர்மறைமாவட்ட அருள்பணியாளராகக் குருத்துவ அருள்பொழிவு பெற்றவர்.
பங்குத்தள அதிபராக, குடும்பம் மற்றும் அப்போஸ்தலப் பணி இயக்குனராகப் பணிபுரிந்த பேராயர் Tonel அவர்கள் உரோமையில் உள்ள (1986-1990) புனித அன்செல்மோ பல்கலைக் கழகத்தில் வழிபாட்டு இறையியலில் பட்டம் பெற்றவர். ஆயர் பேரவையின் வழிபாட்டு மையத்தின் இயக்குநர், துணை அதிபர், பேராசிரியர், தாவோவின் (1992-1997) குருத்துவப் பயிற்சி இல்லத்தின் ஆன்மீக இயக்குனர், (1997) பொறுப்பாளார் என பல பணிகளை ஆற்றியவர்.
2002 முதல் 2007 வரை தாவோ உயர் மறைமாவட்டத்தின் பங்குப் பணியாளராகவும், முதன்மை அதிபர் (விகார் ஜெனரல்) ஆகவும் பணியாற்றிய பேராயர் Sullan Tonel அவர்கள், 2007 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் ஐபில் ஆயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆகஸ்ட் 20 அன்று ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவையின் நலவாழ்வுப் பாதுகாப்பு ஆணையத்திற்குத் தலைவராகப் பொறுப்பேற்று பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்