ஜெய்ப்பூர் மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
இந்தியாவின் ஜெய்ப்பூர் மறைமாவட்ட ஆயர் Oswald Lewis அவர்களின் பணி ஓய்வு விருப்பத்தை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அம்மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அருள்பணி ஜோசப் கல்லறைக்கல் அவர்களை நியமித்துள்ளார்.
ஏப்ரல் 22, சனிக்கிழமையன்று நியமிக்கப்பட்டுள்ள புதிய ஆயர் கல்லறைக்கல் அவர்கள் கேரளாவின் Anavilasam என்னுமிடத்தில் 1964ஆம் ஆண்டு பிறந்து, Ajmer மறைமாவட்டத்தின் அருள்பணியாளராக 1977ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் தேதி திருநிலைப்படுத்தப்பட்டார்.
இராஜஸ்தான் மாநிலத்தின் Ajmer நகர் அமல உற்பவி அன்னை பேராலயத்தின் பங்குதந்தையாகப் பணியாற்றிவந்துள்ள புதிய ஆயர் அவர்கள், அஜ்மீரின் மகரிஷி தயானந்த சரஸ்வதி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் (political science) முதுகலைப்பட்டம் பெற்றுள்ளார். குருமட முதல்வர், பங்குக்குரு, பள்ளி முதல்வர் என பல்வேறுப் பணிகளை மறைமாவட்டத்தின் பல்வேறு தளங்களில் ஆற்றியுள்ள புதிய ஆயர் கல்லறைக்கல் அவர்கள், 2021ஆம் ஆண்டு முதல் அஜ்மீரின் அமல உற்பவ அன்னை பேராலய பங்குகுருவாக செயலாற்றியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்