தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (AFP or licensors)

கடவுளைப் புகழ்வது, சுத்தமான ஆக்சிஜனை சுவாசிப்பதற்கு சமமாகும்

நம் ஆன்மாவை சுத்தப்படுத்தி, நமக்கு தொலைநோக்குப் பார்வையை வழங்கி, நம் துன்ப துயரங்களின் இருள்வேளைகளுக்குள் நம்மை சிறைப்படுத்தாமல் இருக்க, இறைவனைப் புகழ்வது உதவுகிறது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

கடவுளைப் புகழ்வது, சுத்தமான ஆக்சிஜனை சுவாசிப்பதற்கு சமமாகும் என ஏப்ரல் 21, இவ்வெள்ளிக்கிழமையன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நம் ஆன்மாவை சுத்தப்படுத்தி, நம்மை தொலைநோக்குப்பார்வைக் கொண்டவர்களாக மாற்றி, நம் துன்ப துயரங்களின் இருள்வேளைகளில் அதற்குள் நம்மை சிறைப்படுத்தாமல் இருக்க உதவும் இறைவனைப் புகழ்வது என்பது, சுத்தமான ஆக்சிஜனை சுவாசிப்பதை ஒத்தது என திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி எடுத்துரைக்கின்றது.

2012ஆம் ஆண்டு முன்னாள் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்களால் துவக்கப்பட்டு, தற்போது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் தொடரப்பட்டுவரும் திருத்தந்தையர்களின் டுவிட்டர் பக்கத்தில் இவ்வெள்ளிக்கிழமையன்று வெளியிடப்பட்டது, 4801வது ஆங்கில டுவிட்டர் செய்தியாகும். திருத்தந்தையின் டுவிட்டர் பக்கத்தை ஏறக்குறைய  1 கோடியே 88 இலட்சம் பேர் பின் தொடர்ந்துள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 April 2023, 14:28