தேடுதல்

இயற்கை எழில் இயற்கை எழில்  (ANSA)

பூமியைப் பண்படுத்தி பாதுகாக்கும் பொறுப்பை மனிதர்களுக்குக் கடவுள்

பூமியைப் பண்படுத்தி பாதுகாக்கும் பொறுப்பை மனிதர்களுக்குக் கடவுள் கொடுத்துள்ளார்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

படைப்பின் பாதுகாவலர்களாக இருக்கும் பொறுப்பை இறைவன் மனிதர்களிடம் ஒப்படைத்தார் என்று திருவிவிலியத்தின் தொடக்க நூல் எடுத்துரைக்கின்றது என்று உலக பூமி நாளுக்கான குறுஞ்செய்தியை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏப்ரல் 22, சனிக்கிழமை, உலக பூமி நாளைக் கொண்டாடி மகிழும் வேளையில் மனிதர்களாகிய நமக்குப் படைப்பைப் பாதுகாக்கும் கடமை உள்ளது என்பதை ஹேஸ்டாக் பூமி நாள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட குறுஞ்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருவிவிலியத்தின் தொடக்கநூல் குறிப்பிடுவது போல பூமியைப் பண்படுத்தி பாதுகாக்கும் பொறுப்பை மனிதர்களுக்குக் கடவுள் கொடுத்துள்ளார். எனவே, கடவுளின் குழந்தைகள் என்ற முறையில் அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் பூமியைப் பராமரிப்பது என்பது ஒரு கடமையாகும் என்பதே அக்குறுஞ்செய்தி உணர்த்துவதாகும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 April 2023, 13:12