தேடுதல்

பெற்றோருக்கு ஆறுதல் கூறும் திருத்தந்தை பெற்றோருக்கு ஆறுதல் கூறும் திருத்தந்தை 

மகளை இழந்த பெற்றோருக்கு ஆறுதல் கூறிய திருத்தந்தை

ஜெமெல்லி மருத்துவமனையின் புற்றுநோயியல் பிரிவில் சிகிச்சை பெற்று மார்ச் 31 இரவு உயிரிழந்த சிறுமி ஆஞ்செலிக்காவின் பெற்றோரை அரவணைத்து ஆறுதல் கூறினார் திருத்தந்தை.

மெரினா ராஜ் – வத்திக்கான்

இறப்பு மிகவும் துன்பமானது, அதை சந்தித்தவர்களின் உணர்வு அளவிட முடியாதது என்றும் மருத்துவமனையில் உயிரிழந்த சிறுமி ஆஞ்செலிக்காவின் ஆன்மா இறைவனில் நிறை அமைதி அடைய செபிப்போம் என்றும் அச்சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சுவாச தொற்றுநோய் காரணமாக கடந்த மார்ச் 29, புதன்கிழமை உரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏப்ரல் 1 சனிக்கிழமை தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லம் திரும்பும் முன் மருத்துவமனையின் புற்றுநோயியல் பிரிவில் சிகிச்சை பெற்று மார்ச் 31 இரவு உயிரிழந்த சிறுமியின் பெற்றோரை அரவணைத்து ஆறுதல் கூறினார்.

2019 ஆம் ஆண்டில், சிகிச்சைக்காக வந்திருந்த போது சிறுமி ஆஞ்செலிக்காவை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்தித்ததை அச்சிறுமியின் பெற்றோர்  எடுத்துரைத்த நிலையில் அவர்களின் கரங்களைப் பிடித்து, ஆறுதல் மொழி கூறி அரவணைத்து சிறுமியின் ஆன்மா நிறையமைதி அடைய செபித்து தனது ஆசீரையும் அளித்தார்.  

மருத்துவமனையில் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள அனைவரையும், அன்னை மரியாவின் பாதுகாப்பில் ஒப்படைத்து செபிப்பதாகவும், நல்ல உடல் நலம் பெற தொடர்ந்து செபிப்பதாகவும் அங்குள்ள மக்களிடம் உறுதியளித்து விட்டு தனது இல்லமான சாந்தா மார்த்தாவுக்குத் திரும்பினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 April 2023, 13:18