தேடுதல்

அமைதியின் சின்னம் புறா அமைதியின் சின்னம் புறா  (AFP or licensors)

மக்களை நிராகரிக்கும் உலகில் அமைதிக்கு வழியில்லை – திருத்தந்தை

அமெரிக்கா மற்றும் ஆப்ரிக்காவில் பல்வேறு அரசியல் ஆதிக்க செயல்முறைகளுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ பங்களித்தவர்களின் செயல்களுக்காக மன்னிப்பையும் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை.

மெரினா ராஜ் – வத்திக்கான்

அதிகாரம், கலாச்சாரம் மற்றும் அரசியல் ஊடுருவல் வழியாக மக்களை அடிபணியச் செய்வதும் சுரண்டுவதும் ஒரு குற்றமாகும் என்றும், மக்களை ஒடுக்கும் மற்றும் நிராகரிக்கும் உலகில் அமைதிக்கான சாத்தியம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்

மார்ச் 30 31 ஆகிய நாட்களில் வத்திக்கானின் பியோ நான்காம் அரங்கத்தில் திருப்பீட சமூகஅறிவியல் பல்கலைக்கழகத்தார் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு அனுப்பிய செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பொருளாதார மற்றும் கருத்தியல் காரணங்களுக்காக மக்கள் சுரண்டப்படுவதையும் ஓரங்கட்டப்படுவதையும் கண்டித்துள்ளார்.

இன்றைய உலகின் தந்திரமான நவீன காலனித்துவம் ஒரு குற்றம் என்றும், அது அமைதிக்குத் தடையாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமெரிக்கா மற்றும் ஆப்ரிக்காவில் பல்வேறு அரசியல் ஆதிக்க செயல்முறைகளுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ பங்களித்த சில நம்பிக்கையாளர்களின் செயல்களுக்காக மன்னிப்பையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

"காலனித்துவம், மறுகாலனித்துவம் மற்றும் புதிய காலனித்துவம்: சமூக நீதி மற்றும் பொது நன்மையின் ஒரு முன்னோக்கு" என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டமானது, திருப்பீடத்தின் சமூகஅறிவியலுக்கான பல்கலைக்கழகம், சமூக உரிமைகள் மற்றும் பிரான்சிஸ்கன் கோட்பாடு குறித்த நீதிபதிகளின் குழு மற்றும் மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகம் ஆகியவற்றால் நடத்தப்பட்டது.

அமைதியின்றி இருக்கும் உக்ரைன் இரஷ்யா நாடுகளின் அமைதியற்ற நிலை
அமைதியின்றி இருக்கும் உக்ரைன் இரஷ்யா நாடுகளின் அமைதியற்ற நிலை

பொருளாதார மற்றும் கருத்தியல் காலனித்துவம்

காலனித்துவம் அதன் வடிவங்கள், மற்றும் முறைகளின் நியாயப்படுத்தல்களில் மாறிவிட்டது என்றும், பல அரசியல் மற்றும் பொருளாதார நிகழ்வுகளைப் போலவே, இது மறைக்கப்பட்டு, அடையாளம் கண்டு அகற்றுவதை கடினமாக்குகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்

மக்களின் சில நன்மைகளுக்கு உறுதி அளிக்கும் அதே வேளையில், நாட்டின் நிலப்பகுதி, மக்கள் தொகை, பொது நன்மை ஆகியவற்றின் வளங்களை சுரண்டுகின்றது என்றும் அச்செய்தியில் எடுத்துரைத்துள்ள திருத்தந்தை, மக்களின் மதிப்புகள், பாரம்பரியங்கள், வரலாறு மற்றும் மத உறவுகளை வேரோடு பிடுங்குவதன் வழியாக எல்லாவற்றையும் தரப்படுத்த முனைகிறது என்றும், இது வேறுபாடுகளை பொறுத்துக்கொள்ளாத நிகழ்காலத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது என்றும் கூறியுள்ளார்.

புதிய காலனித்துவ நடைமுறைகள், இனவெறி மற்றும் பிரிவினைக்கு எதிரான போராட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அறிவியல், கல்விக் கூடங்கள் மற்றும் ஆய்வு மன்றங்களின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்வேறு அரசியல் ஆதிக்க செயல்முறைகளுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ பங்களித்த சில நம்பிக்கையாளர்களின் செயல்களுக்காக மன்னிப்பையும் வேண்டியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 April 2023, 13:13