தேடுதல்

தவக்கால வழிபாட்டின் போது திருத்தந்தை பிரான்சிஸ்  (கோப்புப்படம் 2018) தவக்கால வழிபாட்டின் போது திருத்தந்தை பிரான்சிஸ் (கோப்புப்படம் 2018) 

ஒரே குருவின் சீடர்களாக ஒன்றிணைந்துப் பயணிப்போம் – திருத்தந்தை

தவக்காலப் பயணமும் சினோடல் என்னும் ஒருங்கிணைந்த பயணமும் ஒன்றே – திருத்தந்தை

மெரினா ராஜ் - வத்திக்கான்

 

ஒரே குருவின் சீடர்களாக ஒரே பாதையில் ஒன்றிணைந்துப் பயணிப்பதால் நமது தவக்காலப் பயணமும் சினோடல் என்னும் ஒருங்கிணைந்த பயணமும் ஒன்றே என்று தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றினைப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்ச் 4 சனிக்கிழமையன்று ஹாஸ்டாக் தவக்காலம் என்ற தலைப்பில் பதிவிடப்பட்டுள்ள குறுஞ்செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நமது நம்பிக்கையுள்ள கிறிஸ்தவ வாழ்வு ஒரு பகிரப்பட்ட அனுபவம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கிறிஸ்தவர்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து இயேசுவைப் பின்பற்றுவதால், நமது நம்பிக்கையுள்ள கிறிஸ்தவ வாழ்வு, ஒரு பகிரப்பட்ட அனுபவம் என்றும், ஒரே குருவின் சீடர்களாக ஒரே பாதையில் ஒன்றிணைந்து பயணிப்பதால் நமது தவக்காலப் பயணமும் சினோடல் என்னும் ஒருங்கிணைந்த பயணமும் ஒன்றே என்றும் அக்குறுஞ்செய்தியில் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 March 2023, 12:46