ஹோலோகாஸ்ட் நினைவுநாளுக்கு திருத்தந்தையின் செய்தி
மெரினா ராஜ் – வத்திக்கான்
இலட்சக் கணக்கான யூத மக்கள் மற்றும் பிற மதங்களைச் சேர்ந்தவர்கள் அழிக்கப்பட்ட நினைவை மறக்கவோ மறுக்கவோ கூடாது என்று கூறி Holocaust நினைவு நாள் பற்றிய தனது கருத்துக்களை டுவிட்டர் குறுஞ்செய்தியாகப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சனவரி 27 வெள்ளிக்கிழமை Holocaust நினைவு நாளை முன்னிட்டு குறுஞ்செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வெறுப்பு மற்றும் வன்முறையின் வேர்களை அகற்றாமல் உடன்பிறந்த உறவுடன் நாம் இருக்க முடியாது என்றும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இலட்சக்கணக்கான யூத மக்கள் மற்றும் பிற மதங்களைச் சேர்ந்தவர்கள் அழிக்கப்பட்ட நினைவு நாளை மறக்கவோ மறுக்கவோ கூடாது என்றும், இனப்படுகொலைக்கான பயங்கரத்தை தூண்டிய வெறுப்பு மற்றும் வன்முறையின் வேர்களை முதலில் அகற்றாமல் எந்த உடன்பிறந்த உறவும் இருக்க முடியாது என்றும் தன் குறுஞ்செய்தியை #ஹோலோகாஸ்ட் நினைவுநாள் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
1933 முதல் 1945 ஆண்டுகளுக்கு இடையில் பிற சிறுபான்மையினரின் எண்ணற்ற உறுப்பினர்கள், 60 இலட்சம் யூதர்கள், ஜெர்மனியின் நாசிச ஆட்சியால் படுகொலை செய்யப்பட்டனர். அதாவது, ஐரோப்பாவின் யூத மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மற்றும் இலட்சக்கணக்கான மக்கள் நாசிச ஆட்சி மற்றும் அதன் ஒத்துழைப்பாளர்களால் கொல்லப்பட்டதை இந்நாள் நினைவுகூருகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்