தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

வலுகுறைந்தவர்களை ஆதரிப்போம் : திருத்தந்தை பிரான்சிஸ்

எளியவர்கள் மீது நாம் எந்தளவுக்குக் கரிசனைகொண்டிருக்கின்றோம் என்பதைப் பொறுத்தே அவர்கள்மீதான நமது நன்மதிப்பு வெளிப்படுகிறது : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

நமது சகோதரர் சகோதரிகளில் எளிய மற்றும் வலுகுறைந்தவர்களை நாம் நடத்தும் விதமே மனித உயிர்கள் மீது நாம் வைத்திருக்கும் நன்மதிப்பைப் பற்றி பேசுகிறது என்பதை எப்போதும் நினைவில் கொள்வோம் என்று ஜனவரி 12, இவ்வியாழனன்று வெளியிட்டுள்ள தனது டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜனவரி 10, இச்செவ்வாயன்று, வழங்கியுள்ள 31-வது உலக நோயாளர் தினச் செய்தியில், பலவீனம் மற்றும் நோயின் அனுபவத்தின் வழியாகக் கடவுளின் வழிகளான நெருக்கம், பரிவிரக்கம், இளகிய மனம் ஆகியவற்றில் ஒன்றிணைந்து நடக்கக் கற்றுக்கொள்வதற்கு நம்பிக்கையாளர்கள் அனைவருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்புவிடுத்திருந்தது, இன்று அவர் வழங்கியுள்ள டுவிட்டர் செய்திக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது.

கர்தினால் George Pell-இன் இறுதிச்சடங்கு

ஜனவரி 19, இச்செவ்வாயன்று உரோமையில் இறைபதம் சேர்ந்த 81 வயது நிரம்பிய கர்தினால் George Pell  அவர்களின் இறுதிச்சடங்குத் திருப்பலி  ஜனவரி 14, வரும் சனிக்கிழமையன்று காலை உள்ளூர் நேரம் 11.30 மணிக்கு, அதாவது, இந்திய இலங்கை நேரம் மாலை 04.00 மணிக்கு நடைபெறும் என்று திருபீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.

இவ்விறுதிச்சடங்குத் திருப்பலியை வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்துவார் என்றும், இதில் கர்தினால்களும் ஆயர்களும் அதிக எண்ணிக்கையில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் மேலும் தெரிவிக்கிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 January 2023, 14:23