தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ்  திருத்தந்தை பிரான்சிஸ்  

கடவுளின் வார்த்தை வலிமையை, அமைதியைத் தருகிறது: திருத்தந்தை

கடவுளின் வார்த்தை நல்ல நோக்கங்களைத் தூண்டியெழுப்புவதுடன், நற்செயல்களையும் நம்மில் தக்கவைக்கின்றது : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இறைவேண்டல் வழியாகவே கடவுளின் வார்த்தை நம்மில் நிலைத்திருக்கும், நாம் அதில் நிலைத்திருப்போம். அவ்வார்த்தை நல்ல நோக்கங்களைத் தூண்டுகிறது, செயலைத் தக்கவைக்கிறது என்று குறுஞ்செய்தி ஒன்றியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்

ஜனவரி 19, இவ்வியாழனன்று வெளியிட்ட குறுந்செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளின் வார்த்தை  நமக்கு வலிமையையும் அமைதியையும் தருகிறது என்றும், நாம் குழப்பமடையும் போது, ​​அது நமது இதயங்களை நம்பிக்கையுடனும் அன்புடனும், தீயவரின் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கும் வலிமை கொண்டது என்றும் தெரிவித்தார்.

ஜனவரி 18,  இப்புதன்கிழமையன்று வத்திக்கானின் புனித ஆறாம் பவுல் அரங்ககில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு  வழங்கிய மறைக்கல்வி உரையிலும் கடவுளின் வார்த்தைக் குறித்து குறிப்பிட்டுள்ளார். இறைத்தந்தையின் வார்த்தையாக இறைமகன் இயேசு இவ்வுலகில் மனுவுரு எடுத்தார் எனவும் வார்த்தையை வாழ்வாக்கிக் காட்டினார் என்றும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 January 2023, 13:55